வினோதன் ஜோன்

வினோதன் பீடி ஜோன் (Vinothen Bede John, பிறப்பு: 27 மே 1960) முன்னாள் இலங்கைத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் ஆறு தேர்வுப் போட்டிகளிலும், 45 பன்னாட்டு ஒருநாள் போட்டிகளிலும் இலங்கைத் துடுப்பாடட் அணியில் விளையாடினார். இவர் ஒரு மித வேகப் பந்து வீச்சாளர். இலங்கை அணிக்கு சர்வதேச துடுப்பாட்ட அந்தஸ்து கிடைத்த காலம் முதல் 1982 - 1987 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இலங்கைத் தேசிய அணியில் இவரின் பங்களிப்பு இடம் பெற்றது.

வினோதன் ஜோன்
Vinothen John
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்வினோதன் பீடி ஜோன்
பிறப்புமே 27, 1960 (1960-05-27) (அகவை 63)
கொழும்பு, இலங்கை
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைவலக்கை மித வேகம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 5)4 மார்ச் 1983 எ. நியூசிலாந்து
கடைசித் தேர்வு23 ஆகத்து 1984 எ. இங்கிலாந்து
ஒநாப அறிமுகம் (தொப்பி 27)12 செப்டம்பர் 1982 எ. இந்தியா
கடைசி ஒநாப30 அக்டோபர் 1987 எ. இங்கிலாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ப.ஒ.நா மு.த ப.அ
ஆட்டங்கள் 6 45 21 56
ஓட்டங்கள் 53 84 127 90
மட்டையாட்ட சராசரி 10.59 9.33 9.07 9.00
100கள்/50கள் 0/0 0/0 1/5 0/0
அதியுயர் ஓட்டம் 27* 15 27* 3*
வீசிய பந்துகள் 1,281 2,311 3,603 2,827
வீழ்த்தல்கள் 28 34 74 43
பந்துவீச்சு சராசரி 21.92 48.67 25.33 45.58
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
2 0 6 6
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0 0
சிறந்த பந்துவீச்சு 5/60 3/28 6/58 3/22
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/– 5/– 4/– 6/–
மூலம்: கிரிக்கின்ஃபோ, 9 பெப்ரவரி 2016

உள்ளூர் துடுப்பாட்டம் தொகு

கொழும்பு புனித பீட்டர் கல்லூரியில் கல்வி கற்ற வினோதன், நொண்டசிகிரிப்ட்சு துடுப்பாட்டக் கழகம், புளூம்ஃபீல்டு துடுப்பாட்டக் கழகம், மொரட்டுவை விளையாட்டுக் கழகம், சிங்கள விளையாட்டுக் கழகம், ஆகியவற்றில் விளையாடினார், அத்துடன் இலங்கைப் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் சார்பில் தேசியமயமாக்கப்பட்ட சேவைகள் கிரிக்கெட் போட்டிகளில் இரண்டு தசாப்தங்களாக விளையாடியுள்ளார்.

பன்னாட்டுத் துடுப்பாட்டம் தொகு

நியூசிலாந்தில் லாங்காசுட்டர் பார்க் விளையாட்டரங்கில் 1983 இல் தனது முதலாவது தேர்வுப் போட்டியில் இலங்கை அணியில் விளையாடினார். எண்பதுகளில் வலிமையான வலக்கை வேகப்பந்து வீச்சாளராக தேர்வு, பன்னாட்டு ஒருநாள் போட்டிகளில் இலங்கையின் தொடக்கப் பந்துவீச்சாளராக விளங்கினார்.

வினோதனின் தேர்வு வரலாறு இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இலார்ட்சு விளையாட்டரங்கில் முடிந்தது. அங்கு இவர் 98 ஓட்டங்களுக்கு நான்கு இலக்குகளைக் கைப்பற்றினார். மொத்தம் ஆறு தேர்வுப் போட்டிகளில் விளையாடி, 28 இலக்குகளை (சராசரி 21.92) கைப்பற்றினார். அத்துடன், 1987 உலகக் கிண்ணத்திற்குப் பிறகு ஓய்வு பெறுவதற்கு முன்பு 45 பன்னாட்டு ஒருநாள் போட்டிகளில் 34 இலக்குகளைக் கைப்பற்றினார்.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வினோதன்_ஜோன்&oldid=3893175" இலிருந்து மீள்விக்கப்பட்டது