விம்லா தங்(Vimla Dang) (1926-2009) ஓர் இந்திய சமூக சேவகரும், அரசியல்வாதியும் ஆவார். இவர், ஒருமைப்பாடு மற்றும் நேர்மையின் மதிப்புகளைக் கடைப்பிடிக்கும் அரசியலின் நீரோட்டமான 'தங் அரசியல் பள்ளி"யை முன்னெடுத்துச் செல்வதில் பெயர் பெற்றவர்.[1] இவர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் தலைவராகவும், அமிருதசரசு மேற்குத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பஞ்சாப் சட்டமன்றத்தின் சட்டமன்ற உறுப்பினருமாவார்.[2] 1970 கள் மற்றும் 80 களில் நடந்த பஞ்சாப் கிளர்ச்சியின் போது உயிர் இழந்தவர்களின் குழந்தைகளுக்கு கல்வி வழங்குவதில் ஈடுபட்டுள்ள "பஞ்சாப் இசுதிரி சபை", "பஞ்சாப் இசுதிரி சபை நிவாரண அறக்கட்டளை" என்ற இரண்டு அமைப்புகளை இவர், இணைந்து நிறுவினார்.[2] 1991 இல் இந்திய அரசு இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த குடிமை விருதான பத்மசிறீ கௌரவத்தை வழங்கியது.[3]

விம்லா தங்
பஞ்சாப் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1992–1997
முன்னையவர்சேவா ராம்
பின்னவர்ஓம் பிரகாசு சோனி
தொகுதிஅமிருதசரசு மேற்கு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
விம்லா பக்கயா

(1926-12-26)26 திசம்பர் 1926
லாகூர், பிரித்தானிய இந்தியா
இறப்பு10 மே 2009(2009-05-10) (அகவை 82)
அமிருதசரசு, இந்தியா
இளைப்பாறுமிடம்அமிருதசரசு
30°45′N 76°47′W / 30.75°N 76.78°W / 30.75; -76.78
துணைவர்சத்யபால் சிங்
வேலைசமூகச் சேவகர்
அரசியல்வாதி
இடதுசாரி சிந்தனையாளர்
தங் அரசியல் பள்ளி
பஞ்சாப் இசுதிரி சபை
விருதுகள்பத்மசிறீ

சுயசரிதை தொகு

விம்லா தங் என்கிற விம்லா பக்காயா, 1926 திசம்பர் 26 அன்று பிரிட்டிசு இந்தியாவின் இலாகூரில் ஒரு காஷ்மீரி குடும்பத்தில் பிறந்தார்.[4] மேலும், தனது ஆரம்பக் கல்வியை உள்ளூர் பள்ளிகளில் செய்தார்.[2] இவர் இலாகூர் மாணவர் சங்கத்தில் உறுப்பினரானபோது மாணவ அரசியலில் ஈடுபட்டார்.[4] இவரது பட்டப்படிப்பு மும்பையின் வில்சன் கல்லூரியில் இருந்தது. அந்த நேரத்தில் இவர் மாணவர் அரசியலில் தொடர்ந்து ஈடுபாடு கொண்டிருந்தார். இவர் அகில இந்திய மாணவர் கூட்டமைப்பின் தூதுக்குழுவின் ஒரு பகுதியாக இருந்தார். இக்குழு மாநிலத்திற்கு வந்து 1943இல் ஏற்பட்ட வங்காளப் பஞ்சத்தின் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டன.[5]

1943 இல் பம்பாயில் நடைபெற்ற இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மாநாட்டிலும் கலந்து கொண்டார்.[6] பின்னர், இவர் முந்தைய செக்கோசிலோவாக்கியாவின் தலைநகரான பிராகா சென்று, சர்வதேச மாணவர் ஒன்றியத்தில் சேர்ந்தார். மேலும் சில வருடங்கள் அந்த அமைப்பின் செயல்பாடுகளிலும் ஈடுபட்டார்.[2]

அரசியல் தொகு

இந்தியாவில், இவர் ஒரு நிருபராக பல வெளியீடுகளில் பணியாற்றினார். ஏப்ரல் 1952 இல், இலாகூரில் அறிமுகமான பொதுவுடைமை சிந்தனையாளரான சத்பால் தங் என்பவரை மணந்தார்.[2] இந்த இணை அமிர்தசரசின் செகார்த்தா சாகிப் பகுதியில் குடியேறியது. இவர்கள் இப்பகுதியின் வளர்ச்சிக்காக சமூக மற்றும் அரசியல் பணிகளைத் தொடர்ந்தனர். இவர்கள் நகரின் நகராட்சி மன்றத்திற்கு பல முறை தலைமை தாங்கினர். விம்லா தங் 1968 முதல் 1978 வரை செகார்த்தா நகராட்சிக் குழுவின் தலைவர் பதவியை வகித்தார்.[7][8] மேலும் இந்த நகரத்தை பஞ்சாபில் ஒரு மாதிரி நகரமாக மாற்றினார். இவர், நகராட்சிக் குழுவின் தலைவராக இருந்த காலத்தில், பஞ்சாப் மாநிலத்தில் முதல் குழு செகார்த்தாவில் நிறுவப்பட்டது.[2] 1970 கள் மற்றும் 80 களில் நடந்த பஞ்சாப் கிளர்ச்சியின் போது உயிர் இழந்தவர்களின் குழந்தைகளுக்கு கல்வி வழங்குவதில் ஈடுபட்டுள்ள "பஞ்சாப் இசுதிரி சபை", "பஞ்சாப் இசுதிரி சபை நிவாரண அறக்கட்டளை" என்ற இரண்டு அமைப்புகளை இவர், இணைந்து நிறுவினார்.[2]

1991 இல் இந்திய அரசு இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த குடிமை விருதான பத்மசிறீ கௌரவத்தை வழங்கியது.[9] அடுத்த ஆண்டு, இவர் 1992இல் பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, அமிர்தசரசு மேற்குத் தொகுதியில் வென்றார்.[2] மேலும், வயதானதால் அமைப்பிலிருந்து தாமாகவே ஓய்வு பெறும் வரை இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் தேசிய அமைப்பின் உறுப்பினராக பணியாற்றினார்.[2] இருப்பினும், அருணா ஆசப் அலி நினைவு அறக்கட்டளை, பாரத் ரத்னா விருது பெற்றவரின் பெயரில் 1997 இல் நிறுவப்பட்ட அரசு சார்பற்ற அமைப்பான அருணா ஆசப் அலி நினைவு அறக்கட்டளை, பஞ்சாப் இசுதிரி சபை போன்றவற்றுடன் இணைந்து தனது சமூக நடவடிக்கைகளைத் தொடர்ந்தார்.[10][11]

இறப்பு தொகு

விம்லாவும் சத்பால் தங்கும் கட்சி அலுவலகத்திலேயே வசித்து வந்தன. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.[12] விம்லா தங் 2009 ஆம் ஆண்டின் சர்வதேச தொழிலாளர் தினத்தில், கட்சியின் செகார்த்தா சாகிப் பகுதி அலுவலகத்தில் கொடியேற்ற விழாவில் பங்கேற்ற பத்து நாட்களுக்குப் பிறகு, மே 10, 2009 அன்று, தனது 83 வயதில் இறந்தார்.

மேற்கோள்கள் தொகு

  1. "Communist legend". Frontline. 12 July 2013. பார்க்கப்பட்ட நாள் 14 October 2015.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 2.8 "Tribute: Vimla Dang". Mainstream XLVII (22). May 2009. http://www.mainstreamweekly.net/article1358.html. 
  3. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
  4. 4.0 4.1 "Vimla Dang passes away". The Hindu. 11 May 2009. பார்க்கப்பட்ட நாள் 14 October 2015.
  5. A. B. Bardhan (June 2013). "Satpal Dang: My Friend & Colleague, My Ideal". Tehelka. http://www.tehelka.com/2013/06/satpal-dang-my-friend-colleague-my-ideal/. பார்த்த நாள்: 2021-06-29. 
  6. D N Gupta (2008). Communism and Nationalism in Colonial India, 1939-45. Sage Publications. பக். 296. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788132100089. https://books.google.com/books?id=UrSGAwAAQBAJ&q=first+party+congress+of+Communist+Party+of+India&pg=PA230. 
  7. Chaman Lal (August 2009). "Tribute: Baba Bhagat Singh Bilga and Vimla Dang - Pride of Punjab". Mainstream XLVII (35). http://www.mainstreamweekly.net/article1578.html. 
  8. "Tribute". Academia. 2015. பார்க்கப்பட்ட நாள் 14 October 2015.
  9. name="Padma Awards"
  10. "Pratiyogita Darpan". Pratiyogita Darpan. July 2009. பார்க்கப்பட்ட நாள் 14 October 2015.
  11. "Aruna Asaf Ali Memorial Trust". Aruna Asaf Ali Memorial Trust. 2015. Archived from the original on 26 டிசம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 14 October 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  12. "Satpal Dang: The last of the true communists". Times of India. 17 June 2013. பார்க்கப்பட்ட நாள் 14 October 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விமலா_டாங்&oldid=3926418" இலிருந்து மீள்விக்கப்பட்டது