விறன்மிண்ட நாயனார்

சைவ சமய 63 நாயன்மார்களில், 'வேளாளர்' குலத்தைச் சேர்ந்த நாயன்மார்.

விறன்மிண்ட நாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார்[2]. அடியார்கள் மீது அன்பும், பக்தியும் விறன்மிண்ட நாயனார் கொண்டிருந்ததால், சிவபூதங்களின் தலைவராக சிவபெருமானால் நியமிக்கப்பட்டவர்.

விறன்மிண்ட நாயனார்
பெயர்:விறன்மிண்ட நாயனார்
குலம்:வேளாளர்
பூசை நாள்:சித்திரை திருவாதிரை
அவதாரத் தலம்:செங்கண்ணூர்
முக்தித் தலம்:ஆரூர்/வண்டாம்பாளை [1]

விறன்மிண்ட நாயனார் வேளான் தொழில் செய்து வந்தவர். திருவாரூரில் சுந்தரமூர்த்தி நாயனார் அடியார்களை வணங்காது சிவபெருமானை வணங்க செல்வதை கண்டு கோபம் அடைந்தார். சிவபெருமானையும், சுந்தர மூர்த்தி நாயனாரையும் சைவ சமயத்தை விட்டே புறம் தள்ளுகிறேன் என கூறினார். விறன்மிண்ட நாயனாரின் கோபத்தை அறிந்து சிவபெருமான் “தில்லைவாழந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்” என முதல்வரி எடுத்துக் கொடுத்து சுந்தர மூர்த்தி நாயனார் பாடலை பாடினார். அவர்களின் பாடலைக் கேட்ட பிறகு விறன்மிண்ட நாயனார்க்கு கோபம் தனிந்து, இருவரையும் மீண்டும் சைவ சமயத்தில் சேர்த்துக் கொண்டார்.

சிவன் அடியார்களும், சிவபெருமானுக்கு இணையானவர்கள் என்ற கருத்தாக்கத்திற்கு வழு சேர்க்கும் வகையில் விறன்மிண்ட நாயனாரின் புராணம் விளங்குகிறது.

இவரை “விரிபொழில்சூழ் குன்றையர் விறன்மிண்டர்க் கடியேன்” என்று திருத்தொண்டத் தொகையில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் குறிப்பிடுகிறார்.

சொல்லிலக்கணம் தொகு

வாழ்க்கைப் புராணம் தொகு

விறன்மிண்ட நாயனார் வேளான் தொழில் செய்து வந்தவர். ஓய்வு நேரங்களில் அருகிலுள்ள சிவாலயங்களை தரிசனம் செய்ய பயணம் மேற்கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தார். சிவனடியார்கள் மீது அளவு கடந்த பக்தி கொண்டிருந்தார். அடியார்களை வணங்குவதையும், அவர்கள் பெருமைகளை எடுத்துக் கூறுவதையும் வழக்கமாக கொண்டிருந்தார்.

ஒரு சமயம் திருவாரூர்த் தேவாசிரிய மண்டபத்தில் சிவனடியார்களோடு அடியார்களின் பெருமைகளை பேசிக் கொண்டிருந்தார் விறன்மிண்டர். திருவாரூர் ஈசனை வணங்க கோயிலுக்கு வந்த சுந்தரமூர்த்தி நாயனார், அடியார்கள் பேசிக் கொண்டிருந்ததைக் கண்டார். தொந்தரவு செய்யவேண்டாமென எண்ணி ஒருவாறு ஒதுங்கிச் சென்றார். சுந்தரர் அடியார்களை வணங்காது கோயிலுக்கு செல்வதை கண்ட விறன்மிண்டர் கோபம் அடைந்தார். சுந்தரர் சைவ அடியாரே அல்ல. அவரை சைவ சமயத்திலிருந்து ஒதுக்கி வைக்கிறேன். அவர் வழிபட சென்ற திருவாரூர் தியாகராசரையும் சைவத்திலிருந்து ஒதுக்கி வைக்கிறேன் என கூறினார்.

விறன்மிண்டரது அடியார் பக்தியை அறிந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள், திருவாரூர்க் கோயிலுட் புகுந்து தியாகராசப் பெருமானைக் கும்பிட்டு நிற்கும்போது “அடியேன் இவ்வடியார்க்கெல்லாம் அடியானாகும் நாள் என்று” வேண்டுதல் செய்தார். அப்பொழுது பெருமான் “நாம் அடியாருடன் உளோம்; அடியாரைப்பாடு என்றருளி “தில்லைவாழந்தணர்” என அடியெடுத்துக் கொடுத்தார். சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேசமெல்லாம் உய்வதற்கு காரணமானதும், சைவநெறியின் சீலம் விளங்கச் செய்வதுமான திருத்தொண்டத் தொகைத் திருப்பதிகத்தை “தில்லைவாழந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்” என்பதை முதலாகக் கொண்டு பாடியருளினார்.

இவ்வண்ணம் சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டத்தொகை பாடுவதற்குக் காரணமாய் அமைந்த விறண்மிண்டநாயனார், பெருமாள் அருளால் திருவடி நிழலை அடைந்து கணநாதராய் விளங்கும் பேற்றினைப் பெற்றார்.

குரு பூசை தொகு

Viralminda Nayanar | 63 Nayanmars | விறல்மிண்ட நாயனார் (dinamalar.com)

விறல்மிண்ட நாயனாரின் குருபூசை ஆண்டுதோறும் Chithirai மாதம் ஆயில்யம் thiruvathirai நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.[3]

Please refer Viralminda Nayanar | 63 Nayanmars | விறல்மிண்ட நாயனார் (dinamalar.com) https://temple.dinamalar.com/news_detail.php?id=1957

உசாத்துணைகள் தொகு

  1. பெரிய புராணம் வசனம் - சிவதொண்டன் சபை, யாழ்ப்பாணம்

மேற்கோள்கள் தொகு

  1. "நாயன்மார் பெருமக்கள் அவதாரத் தலங்கள் மற்றும் முக்தித் தலங்கள்". Archived from the original on 2015-02-24. பார்க்கப்பட்ட நாள் 2015-03-02.
  2. 63 நாயன்மார்கள், தொகுப்பாசிரியர் (01 மார்ச் 2011). விறன்மிண்ட நாயனார். தினமலர் நாளிதழ். https://m.dinamalar.com/temple_detail.php?id=1957. 
  3. "விறல்மிண்ட நாயனார்". தினமலர்.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=விறன்மிண்ட_நாயனார்&oldid=3701444" இலிருந்து மீள்விக்கப்பட்டது