வில்லெம் கெய்கர்

வில்ஹெம் லுட்விக் கெய்கர் அல்லது வில்லெம் கெய்கர் (Wilhelm Ludwig Geiger) (1856-1943) என்பவர் கீழ்த்திசை நாடுகளின் மொழியறிஞர் ஆவார். குறிப்பாக இரானிய மற்றும் இந்திய மொழிக் குடும்பங்களின் பழமையான பண்பாடுகளை ஆய்வுநோக்கில் கற்றுச் சிறந்த இவர், பாளி மொழியிலும் சிறந்து விளங்கினார். அத்துடன் சிங்களம், மாலைத்தீவு மொழி போன்றவற்றிலும் சிறப்பாற்றல் கொண்டவர். இவர் செருமன் நாட்டைச் சேர்ந்தவர். இவர் மகாவம்சம் நூலை மொழிப்பெயர்த்தார்.

இலங்கை வரலாற்றில் தொகு

இலங்கை வரலாற்றில் இவரது பெயர் அழியாதப் பெயராக நிலைத்து விட்ட ஒன்றாகும். 1895ஆம் ஆண்டு இலங்கைக்குப் பயணித்த இவர் சிங்கள மொழியை கற்றுச் சிறந்தார்.[1]. இலங்கையின் வரலாற்றை ஆய்வுசெய்த இவர் 6ஆம் நூற்றாண்டின் மகாநாம தேரர் எனும் பிக்குவினால் தொகுக்கப்பட்ட மகாவம்சம் நூலை பாளி மொழியில் இருந்து செருமன் மொழிக்கு 1908ஆம் ஆண்டு மொழிப்பெயர்ப்பு செய்தார். அதன் பின்னர் 1912ஆம் ஆண்டு மாபெல் ஹெய்னஸ் போட் என்பவரின் உதவியுடன் ஆங்கில மொழிக்கு மொழிப்பெயர்ப்பு ஒன்றைச் செய்தார்.[2][3] இந்த நூல் வரலாற்றாசிரியர்களிடையே மிகவும் பிரசித்திப்பெற்றதுடன், இலங்கை வரலாறு தொடர்பாக பல நூல்கள் வெளிவரவும் காரணமாகியது. இதனை கெய்கர் மகாவம்சம் என்றழைப்போரும் உள்ளனர்.

1989ஆம் ஆண்டுகளின் இலங்கை அரசு, இவரது உருவ தபால் தலை வெளியிட்டு இவரை கௌரவப் படுத்தியது.[4].

மேற்கோள்கள் தொகு

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்லெம்_கெய்கர்&oldid=3915102" இலிருந்து மீள்விக்கப்பட்டது