வீனஸ் எக்ஸ்பிரஸ்

வீனஸ் எக்ஸ்பிரஸ் (Venus Express, VEX) என்பது ஐரோப்பாவின் ஈசா விண்வெளி நிறுவனம் வெள்ளிக் கோளை ஆராய்வதற்காக முதன் முதலில் அனுப்பிய விண்கலம் ஆகும். 2005 ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் நாள் ஏவப்பட்ட இவ்விண்கலம் வெள்ளியின் சுற்றுப் பாதையை ஏப்ரல் 2006 இல் அடைந்தது. வெள்ளிக் கோள் பற்றிய தகவல்களை இது தொடர்ச்சியாக பூமிக்கு அனுப்பி வருகிறது. மொத்தம் ஏழு உபகரணங்களைக் கொண்டு சென்ற இவ்விண்கலத்தின் முக்கிய நோக்கம், வெள்ளியின் வளிமண்டலத்தை நீண்ட காலம் கண்காணிப்பதாகும். இத்திட்டத்திற்கு ஈசா நிறுவனம் டிசம்பர் 31, 2012 வரை நிதியுதவி வழங்கும்.

வீனஸ் எக்ஸ்பிரஸ்
Venus Express
இயக்குபவர்ஈசா
திட்ட வகைவிண்சுற்றுக் கலன்
செயற்கைக்கோள்வெள்ளி
ஏவப்பட்ட நாள்9 நவம்பர் 2005 03:33:34 UTC
ஏவுகலம்சோயூஸ்-FG/பிரெகாட்
திட்டக் காலம்153 நாட்கள்; சுற்றுப்பாதையில் 1,000 நாட்கள்
18 ஆண்டுகள், 4 மாதங்கள்,  20 நாட்கள் elapsed
தே.வி.அ.த.மை எண்2005-045A
இணைய தளம்www.esa.int/SPECIALS/Venus_Express
நிறை1,270 கிகி
சுற்றுப்பாதை உறுப்புகள்
அரைப் பேரச்சு39,468.195 கிமீ
சுற்றுப்பாதையின் வட்டவிலகல்0.8403
சாய்வு89.99 பாகை
சுற்றுக்காலம்24 மணி

காலக்கோடுகளும் முக்கிய கண்டுபிடிப்புகளும் தொகு

  • 9 நவம்பர் 2005: கசக்ஸ்தானின் பாய்க்கனூர் ஏவுதலத்தில் இருந்து 03:33:34 UTC மணிக்கு ஏவப்பட்டது.
  • 11 ஏப்ரல் 2006: வெள்ளியின் சுற்றுவட்டத்தில் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டது. (சுற்றுக்காலம்: 9 நாட்கள்)
  • 13 ஏப்ரல் 2006: வீனஸ் எக்ஸ்பிரஸ் எடுத்த வெள்ளியின் முதலாவது படங்கள் வெளியிடப்பட்டன.
  • 20 ஏப்ரல் 2006: சுற்றுவட்ட உயரம் குறைக்கப்பட்டது. சுற்றுக்காலம் இப்போது 40 மணி.
  • 23 ஏப்ரல் 2006: சுற்றுவட்ட உயரம் மேலும் குறைப்பு. சுற்றுக்காலம் இப்போது 25 மணி 43 நிமி.
  • 7 மே 2006: வீனஸ் எக்ஸ்பிரஸ் தனது சுற்றுவட்ட இலக்கை அடைந்தது.
  • 27 நவம்பர் 2007: பழைய பெருங்கடல்களின் ஆதாரங்கள் வெளியிடப்பட்டன. வெள்ளியில் மின்னல் இடம்பெறுவதற்கான ஆதாரங்களைக் கண்டறிந்தது. பூமியை விட வெள்ளியில் அடிக்கடி இது நிகழ்கிறது. வெள்ளியின் தென் முனையில் பெரும் இரட்டை முனையச் சுழியோட்டம் உள்ளதைக் கண்டறிந்தது.[1][2]
  • 20 மே 2008:வெள்ளியின் வளிமண்டலத்தில் ஐதரொக்சைல் (OH) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது[3]
  • 10 ஏப்ரல் 2010: வெள்ளியில் எரிமலைகள் வெடிக்கும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக கண்டறியப்பட்டது.
  • 7 அக்டோபர் 2011: வெள்ளியில் ஓசோன் படலம் இருப்பது கண்டுபிடிப்பு[4].

மேற்கோள்கள் தொகு

  1. Various authors, Eric (November 2007). "European mission reports from Venus". Nature (450): 633–660. doi:10.1038/news.2007.297. 
  2. "Venus offers Earth climate clues". BBC News. 28 November 2007. http://news.bbc.co.uk/1/hi/sci/tech/7117303.stm. பார்த்த நாள்: 2007-11-29. 
  3. "Venus Express Provides First Detection Of Hydroxyl In Atmosphere Of Venus". SpaceDaily.
  4. A layer of ozone detected in the nightside upper atmosphere of Venus, சயன்ஸ் டிரெக்ட்

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=வீனஸ்_எக்ஸ்பிரஸ்&oldid=3703099" இலிருந்து மீள்விக்கப்பட்டது