வீ. பூங்குன்றன்

வீ. பூங்குன்றன் (இறப்பு: சனவரி 19, 2008, அகவை 25[1]) மலேசியாவில் வாழ்ந்த தமிழ் ஊடகவியலாளர்களில் குறிப்பிடத்தக்கவர். ஒரு வரைகலையாளரான இவர் மலேசியாவில் வெளிவருகிற முன்னணி நாளேடான மலேசிய நண்பனில் சில காலம் பணியாற்றியவர். மக்கள் ஓசை, நண்பன், செம்பருத்தி போன்ற இதழ்களின் நிருபராகவும் பணியாற்றியவர். மலேசியாவின் முன்னணி சிற்றிதழ்களில் இவர் கட்டுரைகள் அதிகம் எழுதி வந்தவர்.

தமிழியக்கம் தொகு

2006 ஆம் ஆண்டில் பல்கலைக்கழக மாணவர்கள் துணையுடன் தமிழியக்கம் எனும் இளைஞர் இயக்கம் அமைக்கப்பட்டது. தமிழியக்கத்தின் நிறுவனர்களில் பூங்குன்றனும் ஒருவர்.

குடும்பம் தொகு

இவரின் தந்தை பழ. வீரன் 2010 செப்டம்பர் 1 இல் சாலை விபத்தில் மரணமானார்.[1]. தமிழ்த்தேசிய உணர்வாளர். மலேசியாவின் வட மாநிலங்களில் இவர் தமிழ்ப்பணி ஆற்றி வந்தவர். அரச நீதி மன்ற மொழிப் பெயர்ப்பாளராகப் பணியாற்றியவர். பழ. நெடுமாறன் தொடங்கிய உலகத் தமிழர் பேரமைப்பின் மலேசிய நிகராளியாக பொறுப்பேற்று செயல்பட்டவர். தாய் நா. லீலாவதி. இரு தம்பிகளும் நான்கு தங்கைகளும் இவர் உடன் பிறந்தவர்கள்.

மறைவு தொகு

விபத்தொன்றில் பாதிக்கப்பட்ட பூங்குன்றன், செராசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் 2008 சனவரி 19 இல் காலமானார்.[1]

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ஆம் திகதியன்றுதான் பூங்குன்றனின் தந்தையும் மலேசியத் தமிழ் நெறிக் கழக பொதுச் செயலாளருமான பழ.வீரன் சாலை விபத்தில் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வீ._பூங்குன்றன்&oldid=3229035" இலிருந்து மீள்விக்கப்பட்டது