வெண் மீசைச் சிரிப்பான்

வெண் மீசைச் சிரிப்பான்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
துரோகலோப்டெரான்
இனம்:
து. மோரிசோனியம்
இருசொற் பெயரீடு
துரோகலோப்டெரான் மோரிசோனியம்
ஓகில்வி-கிராண்ட், 1906

வெண் மீசைச் சிரிப்பான் (White-whiskered laughingthrush)[1][2] or அல்லது பார்மோசன் சிரிக்கும் சிரிப்பான் (Formosan laughing thrush)[3](துரோகலோப்டெரான் மோரிசோனியம்) என்பது லியோத்ரிச்சிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும். இது தைவான் தீவின் மலைக்காடுகளில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும்.[1][2][4]

விளக்கம்

தொகு

வெண் மீசை சிரிப்பான் 26 முதல் 28 cm (10 முதல் 11 அங்) நீளமான, சுமார் 77 கிராம்கள் (2.7 oz) உடல் எடையுடன்[3] தனித்துவமான முக வடிவத்துடன் காணப்படும். இதன் அலகு மஞ்சள் நிறத்தில் பூங்குருவி போன்றது. கண்கள் கருப்பு நிறத்திலும் கால்கள் பழுப்பு-இளஞ்சிவப்பு நிறத்தில் வலுவாகக் காணப்படும்.[2]

இது சமூக வாழ்க்கையினை மேற்கொள்ளும் சிற்றினமாகும். இது பெரும்பாலும் பெரிய குழுக்களாகக் காணப்படும்.[2]

வாழ்விடம் மற்றும் சூழலியல்

தொகு

வெண் மீசை சிரிப்பான் கடல் மட்டத்திற்கு மேல் 1,475 மற்றும் 3,300 m (4,839 மற்றும் 10,827 அடி) வரை உயரப் பகுதிகளில் காணப்படுகிறது.[1] ஆனால் பொதுவாக 2000 மீட்டருக்கு மேல், உயரமான புல், காடுகளின் அடிமரங்கள், முட்செடிகள் மற்றும் வன விளிம்பு புதர்களில் காணப்படும். இது சாலையோரங்கள் மற்றும் காடுகளை வெட்டுவதால் காணப்படும் திறந்த பகுதிகளிலும் வாழ்கின்றன.[2] யுஷான் தேசிய பூங்காவில், புல்வெளி, பைன் வனப்பகுதி அல்லது தளிர் காடுகளை விட கலப்பு ஊசியிலையுள்ள காடுகளில் அதிகமாகக் காணப்படும். தைவான் புல்வெட்டா (புல்வெட்டா பார்மோசனா) மற்றும் தைவான் யுஹினா (யுகினா புருனிசெப்சு) ஆகியவற்றுடன் சேர்ந்து, அந்த வாழ்விடத்தில் இது ஒரு மேலாதிக்க சிற்றினமாக உள்ளது.[5] இது தரையில் உணவை எடுத்துக்கொள்ளும் அனைத்துண்ணி.[5]

காப்பு நிலை

தொகு

தைவானில் வெண் மீசை சிரிப்பான் என்பது ஓரளவு பொதுவான இனமாகும். இது 10,000 முதல் 100,000 இனப்பெருக்க இணைகளுடன் காணப்படுவதாக மதிப்பிடப்பட்ட மக்கள்தொகையினைக் கொண்டுள்ளது. வாழ்விட அழிவு மற்றும் துண்டு துண்டாக வாழிடம் இருப்பதால் இதன் மக்கள்தொகை குறைந்து வருவதாக நம்பப்பட்டாலும், பாதிக்கப்படக்கூடிய இனமாகக் கருதப்படவில்லை.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 BirdLife International (2015). "Trochalopteron morrisonianum". IUCN Red List of Threatened Species 2015: e.T22715750A84727493. doi:10.2305/IUCN.UK.2015.RLTS.T22715750A84727493.en. https://www.iucnredlist.org/species/22715750/84727493. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 Brazil, Mark (2009). Birds of East Asia. Christopher Helm. pp. 374–375. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7136-7040-0.
  3. 3.0 3.1 Ding, Tzung-Su; Yuan, Hsiao-Wei; Geng, Shu; Lin, Yao-Sung; Lee, Pei-Fen (2005). "Energy flux, body size and density in relation to bird species richness along an elevational gradient in Taiwan". Global Ecology and Biogeography 14 (4): 299–306. doi:10.1111/j.1466-822X.2005.00159.x. http://ntur.lib.ntu.edu.tw/bitstream/246246/161636/1/20.pdf. 
  4. K. T. Shao (ed.). "Trochalopteron morrisonianum (Ogilvie-Grant, 1906)". Catalogue of life in Taiwan. Biodiversity Research Center, Academia Sinica, Taiwan. பார்க்கப்பட்ட நாள் 3 December 2016.
  5. 5.0 5.1 Ding, Tzung-Su; Lee, Pei-Fen; Lin, Yao-Sung (1997). "Abundance and distribution of birds in four, high elevation plant communities in Yushan National Park, Taiwan". Acta Zoologica Taiwanica 8 (1): 55–64. http://homepage.ntu.edu.tw/~ding/research/Ding%20et%20al%201997.pdf. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெண்_மீசைச்_சிரிப்பான்&oldid=3867612" இலிருந்து மீள்விக்கப்பட்டது