வெப்ப இயக்கவியல் சமநிலை

வெப்ப இயக்கவியலில் ஒரு வெப்ப இயக்கவியல் அமைப்பு வெப்பச் சமனிலை, பொறிமுறைச் சமநிலை, கதிர்வீச்சுச் சமனிலை,வேதியியற் சமனிலையில் இருக்குமானால், அதாவது அந்த அமைப்பில் நிகரப் பொருண்மமோ ஆல்லது ஆற்றலோ பாயாதிருந்தால்,அது வெப்ப இயக்கவியல் சமனிலையில் (Thermodynamic equilibrium) இருக்கிறது எனலாம். சமநிலை அல்லது சமனிலை ஒரு சமன்பட்ட நிலையைக் குறிக்கிறது. அப்படியொரு வெப்ப இயக்கவியல் சமன்நிலையில் அவ்வமைப்பில் எந்தவொரு பொருள் அல்லது ஆற்றல் பாய்வும் இராது; நிலை மாற்றங்களோ, சமனற்ற நிலையோ எதுவும் இராது. வெப்ப இயக்கவியல் சமநிலையில் இருக்கும் ஓர் அமைப்பு, தன் சுற்றுப்புறத்தில் இருந்து தனிமைப்படுத்தப்படும்போது அதில் எந்தவொரு மாற்றமும் நிகழ்வதில்லை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெப்ப_இயக்கவியல்_சமநிலை&oldid=3655232" இலிருந்து மீள்விக்கப்பட்டது