வெற்று முக சிலந்திப்பிடிப்பான்

வெற்று முக சிலந்திபிடிப்பான்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
அராக்னோதெரா
இனம்:
அ. கிளாரே
இருசொற் பெயரீடு
அராக்னோதெரா கிளாரே
பிளேசியசு, 1890[2]

வெற்று முக சிலந்திப்பிடிப்பான்[3] (Naked-faced spiderhunter)(அராக்னோதெரா கிளாரே) என்பது நெக்டரினிடே குடும்பத்தில் உள்ள ஒரு வகை பறவை சிற்றினமாகும். இது பிலிப்பீன்சில் மட்டும் காணப்படும் அகணிய உயிரி ஆகும்.[4] இதன் இயற்கை வாழிடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள் ஆகும்.

பெயர் தொகு

பறவையின் விலங்கியல் சிற்றினப் பெயரான கிளாரே யாரைக் குறிப்பிடுகிறது என்பது குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் இது 1890-ல் இந்த சிற்றினத்தை விவரித்த ஆகஸ்ட் வில்ஹெல்ம் ஹென்ரிச் பிளாசியசின் மறைந்த சகோதரியான கிளாரா பிளாசியசின் (1878-1880) நினைவாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.[5]

துணையினங்கள் தொகு

வெற்று முக சிலந்திப்பிடிப்பான் பிலிப்பீன்சில் காணப்படுகிறது. இவை நான்கு துணையினங்களாக பிரிக்கப்பட்டுள்ளது:[4]

  • அராக்னோதெரா கிளாரே லூசோனெனிசு - வடக்கு பிலிப்பீன்சில் உள்ள லூசோன் தீவில் உள்ள சியரா மாட்ரே மலைத்தொடர்
  • அராக்னோதெரா கிளாரே பிலிப்பீன்சு- கிழக்கு பிலிப்பீன்சில் சமர், லெய்ட் மற்றும் பிலிரான்
  • அராக்னோதெரா கிளாரே கிளாரே- தெற்கு பிலிப்பீன்சில் உள்ள மின்டானோ தீவில் உள்ள டாவோவைச் சுற்றியுள்ள பகுதிகள்.
  • அராக்னோதெரா கிளாரே மாலிந்தோஜெனிசசு - தெற்கு பிலிப்பீன்சில் உள்ள மின்டானோ தீவின் மத்திய மற்றும் மேற்குப் பகுதிகள்

நிலை தொகு

இந்தச் சிற்றினம் பெரிய பரவலான வரம்பினை வாழிடப்பகுதியாகக் கொண்டுள்ளது. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் இதை தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாகப் பட்டியலிட்டுள்ளது.

நடத்தை தொகு

இவை சிலந்திகளை வேட்டையாடும். காடுகள் மற்றும் தாழ்வான பகுதிகள் மற்றும் குறைந்த உயரமுடைய மலைப் பகுதிகளில் உள்ள புதர் நிலங்களில் காணப்படுகின்றன். இவை வாழைப்பூக்களை விரும்பு உண்ணும்.

மேற்கோள்கள் தொகு

  1. BirdLife International (2018). "Arachnothera clarae". IUCN Red List of Threatened Species 2018: e.T22718118A131982953. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22718118A131982953.en. https://www.iucnredlist.org/species/22718118/131982953. பார்த்த நாள்: 13 November 2021. 
  2. Blasius, Wilh. (1890). "Die von Herrn Dr. Platen und dessen Gemahlin im Sommer 1889 bei Davao auf Mindanao gesammelten Vögel". Journal für Ornithologie 38 (2): 148. doi:10.1007/BF02250498. https://www.biodiversitylibrary.org/page/32796104. 
  3. Sveriges ornitologiska förening (2017) Officiella listan över svenska namn på världens fågelarter, läst 2017-02-14
  4. 4.0 4.1 Clements, J. F., T. S. Schulenberg, M. J. Iliff, D. Roberson, T. A. Fredericks, B. L. Sullivan, and C. L. Wood (2016) The eBird/Clements checklist of birds of the world: Version 2016 http://www.birds.cornell.edu/clementschecklist/download, läst 2016-08-11
  5. Jobling, J. A. (2016). Key to Scientific Names in Ornithology. Ur del Hoyo, J., Elliott, A., Sargatal, J., Christie, D.A. & de Juana, E. (red.) (2016). Handbook of the Birds of the World Alive. Lynx Edicions, Barcelona. Hämtad från www.hbw.com.