வெளித் திசையன் குறிப்பேற்றம்

வெளித் திசையன் குறிப்பேற்றம் (Space vector modulation) என்பது துடிப்பு அகலக் குறிப்பேற்றத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு நெறிமுறையாகும்[1]. இது மாறுதிசை மின்சார அலைவடிவங்களை உருவாக்கப் பயன்படும்; பல டி-வகை மிகைப்பிகளைப் பயன்படுத்தி நேர் மின்னோட்டத்தில் இருந்து வேகங்கள் மாறுபடும் முத்தறுவாய் மாறுதிசை ஆற்றலூட்டு இயக்கிகளை ஓட்ட பெரும்பாலும் பயன்படும். வெவ்வேறு தரத்தினையும், கணிப்புத் தேவைகளையும் பொருத்து பல்வேறு வகைகளில் வெளித் திசையன் குறிப்பேற்றம் அமைகின்றன. இது தற்போது வளர்ச்சியடையும் துறை யாது என்றால் அது இந்த நெறிமுறைகளை இயல்பாக விரைவு இணைப்புமாற்றம் செய்யும் பொழுது உருவாகும் மொத்தச் சீரிசை உருக்குலைவைக் குறைப்பதாகும்.

மேற்கோள்கள் தொகு