வெள்ளி பெர்குளோரேட்டு

வேதிச் சேர்மம்

வெள்ளி பெர்குளோரேட்டு (Silver perchlorate) என்பது AgClO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வெண்மை நிறத்தில் திண்மமாக உள்ள இச்சேர்மம் ஒற்றை நீரேற்றாக உருவாகிறது. இலேசாக நீர் உறிஞ்சும் தன்மை கொண்டதாகவும் உள்ளது. நேர்மின் அயனியைத் Ag+ நேர்மின் அயனியைத் தரக்கூடிய பயனுள்ள ஒரு மூலமாகக் கருதப்படுகிறது. சேர்மத்தில் பெர்குளோரேட்டு அயனி இருப்பது ஓர் அபாயமாகும். கரிம வேதியியலில் வெள்ளி பெர்குளோரேட்டு ஒரு வினையூக்கியாக பயன்படுத்தப்படுகிறது.

வெள்ளி பெர்குளோரேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
வெள்ளி பெர்குளோரேட்டு
வேறு பெயர்கள்
பெர்குளோரிக் அமிலம், வெள்ளி(1+) உப்பு
இனங்காட்டிகள்
7783-93-9 Y
14242-05-8 (hydrate) N
ChemSpider 22968 Y
EC number 232-035-4
InChI
  • InChI=1S/Ag.ClHO4/c;2-1(3,4)5/h;(H,2,3,4,5)/q+1;/p-1 Y
    Key: YDHABVNRCBNRNZ-UHFFFAOYSA-M Y
  • InChI=1/Ag.ClHO4/c;2-1(3,4)5/h;(H,2,3,4,5)/q+1;/p-1
    Key: YDHABVNRCBNRNZ-REWHXWOFAI
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 24562
  • [Ag+].[O-]Cl(=O)(=O)=O
பண்புகள்
AgClO4
வாய்ப்பாட்டு எடை 207.319 கி/மோல்
தோற்றம் நிறமற்றது, நீருறிஞ்சும் படிகங்கள்
அடர்த்தி 2.806 கி/செ.மீ3
உருகுநிலை 486 °C (907 °F; 759 K) (சிதையும்)
557 கி/100 மி.லி (25 °செல்சியசு)
792.8 கி/100 மி.லி (99 °செல்சியசு)
கரைதிறன் கரிமக் கரைப்பான்களில் கரையும்
கட்டமைப்பு
படிக அமைப்பு கனசதுரம்
தீங்குகள்
R-சொற்றொடர்கள் R8 R34 R50
S-சொற்றொடர்கள் வார்ப்புரு:S15 S17 S26 S36/37/39 S45
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

உற்பத்தி தொகு

பெர்குளோரிக் அமிலத்தையும் வெள்ளி நைட்ரேட்டையும் சூடுபடுத்தி வினைபுரியச் செய்வதால் வெள்ளி பெர்குளோரேட்டு உருவாகிறது. பேரியம் பெர்குளோரேட்டுடன் வெள்ளி சல்பேட்டு அல்லது பெர்குளோரிக் அமிலத்துடன் வெள்ளி ஆக்சைடு சேர்த்து வினைபுரியச் செய்தும் மாற்று வழியில் வெள்ளி பெர்புரோமேட்டை தயாரிக்கலாம்.

கரைதிறன் தொகு

பென்சீன் (52.8 கிராம்/லி) மற்றும் தொலுயீன் (1010 கிராம்/எல்) போன்ற அரோமாட்டிக் கரைப்பான்களில் இதன் கரைதிறன் குறிப்பிடத்தக்கதாக முக்கியத்துவம் பெறுகிறது [1]. இந்த கரைப்பான்களில் வெள்ளி நேர்மின் அயனி அரீன்களை பிணைக்கிறது. இது போன்ற கரைசல்களிலிருந்து பெறப்பட்ட படிகங்களைப் பற்றி விரிவான படிக ஆய்வுகள் நிரூபிக்கின்றன [2][3]. இது 100 மில்லி தண்ணீரில் 500 கிராம் வரை அதிசயமாக கரைகிறது.

தொடர்புடைய சேர்மங்கள் தொகு

வெள்ளி நைட்ரேட்டைப் போல வெள்ளி பெர்குளோரேட்டும் ஆலைடு ஈந்தணைவிகளை பெர்குளோரேட்டால் இடப்பெயர்ச்சி செய்கிறது.. இது வலிமையற்ற அல்லது ஒருங்கிணைப்பில்லாத எதிர்மின் அயனியாகும். பெர்குளோரேட்டு உப்புகளின் வெடிப்புத்தன்மை குறித்த கவலைகள் காரணமாக வேதித் தொகுப்பு வினைகளில் வெள்ளி பெர்குளோரேட்டின் பயன்பாடு குறைந்துள்ளது. வெள்ளி டெட்ராபுளோரோபோரேட்டு மற்றும் தொடர்புடைய வெள்ளி டிரைபுளோரோமெத்தேன்சல்போனேட்டு மற்றும் வெள்ளி எக்சாபுளோரோபாசுபேட்டு போன்றவை வேறு சில வெள்ளி வினையாக்கிகளாகும்.

மேற்கோள்கள் தொகு

  1. F. Březina; J. Mollin; R. Pastorek; Z. Šindelář (1986). Chemické tabulky anorganických sloučenin [Chemical tables of inorganic compounds] (in Czech). Prague: SNTL.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  2. E. A. Hall Griffith; E. L. Amma (1974). "Metal Ion-Aromatic Complexes. XVIII. Preparation and Molecular Structure of Naphthalene-Tetrakis(silver perchlorate) Tetrahydrate". Journal of the American Chemical Society 96 (3): 743–749. doi:10.1021/ja00810a018. 
  3. R. K. McMullan; T. F. Koetzle; C. J. Fritchie Jr. (1997). "Low-Temperature Neutron Diffraction Study of the Silver Perchlorate–Benzene π Complex". Acta Crystallographica B 53 (4): 645–653. doi:10.1107/S0108768197000712. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளி_பெர்குளோரேட்டு&oldid=2803658" இலிருந்து மீள்விக்கப்பட்டது