ஷானாஸ் முன்னி

ஷானாஸ் முன்னி ( Shahnaz Munni, பிறப்பு 1969) ஒரு வங்காளதேச பத்திரிகையாளரும், கவிஞரும், எழுத்தாளரும் ஆவார். [1] ஜனவரி 2016 முதல், டாக்காவைத் தளமாகக் கொண்ட தொலைக்காட்சி நிறுவனமான நியூஸ்24 இன் தலைமைச் செய்தி ஆசிரியராக இருந்து வருகிறார். [2] மேலும், குழந்தைகளின் நலனிலும் தனி அக்கறை காட்டுகிறார்.

ஷானாஸ் முன்னி (2018).

சுயசரிதை தொகு

'டாக்காவில் 8 பிப்ரவரி 1969 இல் பிறந்த முன்னி, 1994 இல் தாக்கா பல்கலைக்கழகத்தில் சமூக அறிவியல் படிப்பதற்கு முன்பு டாக்காவின் ஹோலி கிராஸ் கல்லூரியில் பயின்றார். [3] பட்டப்படிப்பு முடிந்ததும், 1999 இல் எகுஷே தொலைக்காட்சியில் ஒரு பத்திரிகையாளராக இவரது வாழ்க்கை தொடங்கியது. பின்னர் 2003 இல் ஏடிஎன் பங்களாவில் மூத்த நிருபராக சேர்ந்தார். அதற்கு முன்பு நியூஸ் 24 க்கு சிறப்பு நிருபராக இருந்தார். 2016 இல், மூத்த செய்தி ஆசிரியராக பதவி உயர்வு பெற்றார்.

குழந்தைகள் நலன் தொகு

முன்னி குழந்தைகள் நலனில் தனி அக்கறை காட்டியுள்ளார். செப்டம்பர் 2006 இல், குழந்தைகளின் உரிமைகள் குறித்த சமூகத்தின் அணுகுமுறையை மேம்படுத்தும் நோக்கில் யுனிசெப்பின் குழந்தை உரிமைகள் கவிதை விழாவில் பங்களித்த 20 சிறந்த கவிஞர்களில் இவரும் ஒருவர். [4] 2009 ஆம் ஆண்டில், மீனா மீடியா விருதுகளில் 18 வயதுக்கு மேற்பட்ட தொலைக்காட்சி இதழியல் பிரிவில், குழந்தைகள் முகர்ந்து பார்க்கும் பசையைப் பற்றி அறிக்கை செய்ததற்காக இரண்டாம் பரிசை வென்றார். ஊடகங்கள் வயது வந்தோருக்கான பார்வையாளர்களை முதன்மையாகக் கொண்டிருப்பதால் தொலைக்காட்சியில் குழந்தைகளிடமிருந்து மறைப்பது கடினம் என்று இவர் கருத்து தெரிவித்தார்: "குழந்தைகளின் நிலைமையை மேம்படுத்த ஊடகங்களுக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. ஆனால் முதலில் நாம் அவர்களின் அணுகுமுறையையும் மனநிலையையும் மாற்ற வேண்டும்' [5] 2013 ஆம் ஆண்டில், தாய்வழி மற்றும் குழந்தை சுகாதார ஒருங்கிணைந்த திட்டத் தூதராக இவர் அம்ஜிரிகஞ்ச் மற்றும் நபிகஞ்ச் உபாசிலாஸ் சமூகங்களுக்குச் சென்று, சேவ் தி சில்ட்ரன் திட்டத்திற்காக தான் எழுதி வரும் 50 வெற்றிக் கதைகளுக்கான பின்னணியைச் சேகரித்தார். [6] முன்னி வங்காளதேசத்தில் காசநோய்க்கு எதிரான போராட்டத்திலும் பங்களித்துள்ளார். 2015 விருதுகளுக்கான மூன்று பேர் கொண்ட நடுவர் குழுவில் BRAC க்கு உதவினார். [7]

ஜினர் கொன்னயா (The Spirit's Daughter), என்ற இவரது முதல் சிறுகதை புத்தகம் [8] 1977இல் வெளியிடப்பட்டது. இந்திய மற்றும் தெற்காசிய மொழிகளில் எழுதும் கவிஞர்களின் படைப்புகள் ஜெர்மன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டபோது ஜெர்மன் கவிதைகளுக்கு அறிமுகம் செய்யப்பட்ட கோதே நிறுவனம் நடத்தும் "கவிஞர்களை மொழிபெயர்க்கும் கவிஞர்கள்" திட்டத்தில் முன்னி பங்கேற்றுள்ளார். நவீன ஜெர்மன் கவிஞரான ஹென்ட்ரிக் ஜாக்சனின் கவிதைகளை இவர் மொழிபெயர்த்தபோது இவரது பல பெங்காலி கவிதைகள் ஜெர்மன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன. [9] [10]

டாக்கா பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பட்டதாரியாக இருந்த இவர் வங்கதேச எழுத்தாளர் அஸ்பர் ஹுசைனுடன் சேர்ந்து ஆராய்ச்சி மேற்கொண்டார். [11]

சான்றுகள் தொகு

  1. "Shahnaz Munni". Goethe Institut. பார்க்கப்பட்ட நாள் 13 November 2016.
  2. "Shahnaz Munni joins News 24" இம் மூலத்தில் இருந்து 11 நவம்பர் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161111060902/http://www.daily-sun.com/post/105158/Shahnaz-Munni-joins-News-24. பார்த்த நாள்: 13 November 2016. 
  3. "Shahnaz Munni". lirikline. பார்க்கப்பட்ட நாள் 13 November 2016.
  4. "September 27, 2006: Poetry festival on rights of the child held in Dhaka". Unicef. 27 September 2006. Archived from the original on 12 நவம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 13 November 2016.
  5. McNamara (4 November 2009). "Media 5826". Unicef. Archived from the original on 10 நவம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 13 November 2016.
  6. "Journalist Shahnaz Munni, Maternal and Newborn Health Ambassador of MCHIP visited MaMoni Project". Save the Children. 25 March 2013. Archived from the original on 11 நவம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 13 November 2016.
  7. "BRAC Recognises media efforts to report on TB". BRAC. 16 April 2015.
  8. "Shahnaz Munni". Dahaka Tribune. Archived from the original on 10 November 2016. பார்க்கப்பட்ட நாள் 13 November 2016.
  9. Hasan, Lamat R. (8 October 2016). "Chapter & verse: poetic encounters for the love of language & culture". Catch News. பார்க்கப்பட்ட நாள் 13 November 2016.
  10. "Poets Translating Poets at Goethe Institut today". 11 September 2015. http://www.theindependentbd.com/arcprint/details/15405/2015-09-11. 
  11. "shahnaz Munni". University of Dhaka. பார்க்கப்பட்ட நாள் 13 November 2016.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷானாஸ்_முன்னி&oldid=3703317" இலிருந்து மீள்விக்கப்பட்டது