ஷோளக மொழி (ஆங்கில மொழி: Sholaga language) தமிழ் மற்றும் கன்னட மொழிகளுடன் தொடர்புடைய ஒரு திராவிட மொழி ஆகும். இதை ஷோளக மக்கள் பேசுகிறார்கள். இம்மொழியைத் தாய்மொழியாகக் கொண்டோரின் எண்ணிக்கை 24,000 ஆகும்.

ஷோளக மொழி
நாடு(கள்)இந்தியா
பிராந்தியம்தென்னிந்தியா, தமிழ்நாடு, கர்நாடகம்
இனம்ஷோளக மக்கள்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
24,000  (2006)[1]
திராவிடம்
மொழிக் குறியீடுகள்
ISO 639-3sle
மொழிக் குறிப்புshol1240[2]

மற்ற பெயர்கள் தொகு

இம்மொழி காடு ஷோளிகர், ஷோளிக, ஷோளிகர், சோளக, சோளிக, சோளிகர், சோளநாயக்கன்ஸ், சோளநாயிகா எனவும் அழைக்கப்படுகிறது.

வகைப்படுத்தல் தொகு

தெற்கு, தென்மைய, மைய, வடக்கு மற்றும் வகைப்படாதது என்று ஐந்து வகைகளாகப் பிரிக்கப்பட்ட திராவிட மொழிகளில் ஷோளக மொழி ஒரு தென்திராவிட மொழி என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

சொற்கள் தொகு

தமிழ் ஷோலக
புலி dodinayi
யானை coquedana
தந்த யானை coquedonga
வளர்ந்து வரும் தந்த பெண் யானை coreyani
மான் jinke
சாம்பார் மான் kadave
மோஸ் மான் koore
முண்ட்ஜக் மான் / குரைக்கும் மான் tadu-koori
கற்பாறைகள் மற்றும் மிகவும் அரிதாக மழை பகுதி udugaru
ஒரு பசுமைமாறா காடு kanu-kadu

சான்றுகள் தொகு

  1. ஷோளக மொழி at Ethnologue (18th ed., 2015)
  2. Nordhoff, Sebastian; Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2013). "ஷோலக". Glottolog 2.2. Leipzig: Max Planck Institute for Evolutionary Anthropology. {{cite book}}: Invalid |display-editors=4 (help); Unknown parameter |chapterurl= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷோலக_மொழி&oldid=2098860" இலிருந்து மீள்விக்கப்பட்டது