ஸ்ரீவித்யா (தாய்ப்பால் கொடையாளி)

வித்யா என்பவர் தமிழகத்தில் புகழ்பெற்ற தாய்ப்பால் கொடையாளி ஆவார். இவர் அதீத தாய்ப்பாலை கொடையாக தந்தமைக்காக அறியப்படுகிறார். இவர் தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூரில் வசிக்கிறார்.

ஸ்ரீவித்யா
தேசியம்கோவை இந்தியா
அறியப்படுவதுதாய்பால் கொடையாளி
வாழ்க்கைத்
துணை
பைரவன்
பிள்ளைகள்அசிந்த்யா,ப்ரக்ருதி

திருப்பூரை சேர்ந்த ரூபா செல்வநாயகி என்பவர் நடத்திவரும் அமிர்தம் பவுண்டேசன் மூலமாக தாய்ப்பால் தானம் செய்தார். முறையாக சேகரித்த தாய்ப்பாலை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள தாய்ப்பால் வங்கியில் சேர்க்கப்பட்டு அங்கு பிறக்கும் அங்கு எடை குறைவாக பிறக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது.[1] இவர் மகள் பிறந்த ஐந்தாவது நாளில் தாய்ப்பால் தானம் கொடுக்கத் தொடங்கி 7வது மாத காலத்தில் 106 லிட்டர் தாய்ப்பால் தானம் செய்துள்ளார். மேலும் 10 மாத காலத்தில் 135 லிட்டருக்கு மேல் தாய்ப்பால் தானம் செய்துள்ளார்.[2]

இந்த தாய்ப்பால் கொடைக்காக 'ஆசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' மற்றும் 'இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' ஆகியவற்றில் இடம் பெற்றுள்ளார். [3]

ஆதாரங்கள் தொகு

  1. "Breast Milk donation | Indian Express Tamil". tamil.indianexpress.com.
  2. "கோவை | அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகளுக்கு வழங்குவதற்காக 10 மாதங்களில் 135 லிட்டர் தாய்ப்பாலை தானம் செய்த பெண்". இந்து தமிழ் திசை.
  3. "ரெக்கார்டு.. 10 மாதங்களில் 135 லிட்டர் தாய்ப்பால் தானம் செய்து.. சாதனை செய்த கோவை பெண்.. சபாஷ்". tamil.oneindia.com. 25 ஜன., 2023. {{cite web}}: Check date values in: |date= (help)

வெளி இணைப்புகள் தொகு

7 மாதங்களில் 105 லிட்டர் தாய்ப்பால் தானம்; 27 வயது இளம்பெண் தரும் விழிப்புணர்வு - தி.ரா.மகாலட்சுமி 27 ஜனவரி 2023