ஹொங்கொங் சுரங்கப் பாதைகளின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்
(ஹொங்கொங் சுரங்கப் பாதைகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஹொங்கொங் சுரங்கப் பாதைகள் அல்லது ஹொங்கொங் சுரங்கப் பாதைகளின் பட்டியல் (List of tunnels in Hong Kong) என்பது ஹொங்கொங் வாகன போக்குவரத்துத் துறையில் மலைகளைக் குடைந்தும், கடலுக்கு அடியால் பாரிய குழாய் வடிவிலான கட்டுமானப் பணிகளை மேற்கொண்டும் உருவாக்கப்பட்ட சுரங்கப் பாதைகளாகும். இந்த சுரங்கப் பாதைகளின் உருவாக்கம் ஹொங்கொங் போக்குவரத்து துறையில் வாகன நெறிசல் அதிகரிப்பின் காரணமாக எழுந்தப் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வாக அமைந்தது எனலாம். இந்தச் சுரங்கப் பாதைகளில் சில கடலடிச் சுரங்கப் பாதைகள் ஆகும். ஏனையவை மலைகளை குடைந்து அமைக்கப்பட்ட சுரங்கப் பாதைகளாகும்.

ஹொங்கொங் பட்டியல்கள்
பட்டியல்கள்

நூலகங்கள்
தீவுகள்
மறைந்தத் தீவுகள்
தீபகற்பங்கள்
மாவட்டங்கள்
குடாக்கள்
பாலங்கள்
பூங்காக்கள்
மேம்பாலங்கள்
சிறைகள்
நகரகங்கள்
தொடருந்தகங்கள்
சுரங்கப்பாதைகள்
தூதரங்கள்

ஹொங்கொங்

ஹொங்கொங் விக்கிவாசல்

தொகு


கிழக்குத் துறைமுக கடலடிச் சுரங்கம்
துறைமுக கடலடிச் சுரங்கத்தின் முகப்பு

இந்த சுரங்கப் பாதைகளின் உள்ளே அவசர ஆபத்து அல்லது விபத்துக்களின் போது முன்னெச்சரிக்கை பாதுக்காப்பு பாதுகாப்பு நடவடிக்கைக்காக; ஒக்சிசன் வசதி, அவசர தீயணைப்பு வசதி, உடனடி முதலுதவி, போன்றவற்றையும் கொண்டுள்ளன. அத்துடன் இச்சுரங்கங்களின் உள்ளே இருளாக அல்லாமல், சுரங்கத்தின் உற்பகுதி மின்விளக்குகளால் ஒளிக்கோலமாக இரவு, பகல் வேறுபாடின்றி காணக்கூடியதாக உள்ளன.[1] [2] சுரங்கத்தின் பக்கச் சுவர்கள் பொருத்து அட்டைகளால் வடிவமைக்கப் பட்டவைகளாக உள்ளன.[3] பக்க சுவர்களில் அவசர தேவையின் போது மக்கள் பாதுக்காப்பாக வெளியேறுவதற்கான மாற்று வழிகளும் உள்ளன.

வரலாறு தொகு

ஹொங்கொங்கில் சுரங்கப் பாதைகளின் வரலாறு 1967 ஆம் ஆண்டு ஆரம்பமானது எனலாம். அதாவது ஹொங்கொங்கில் முதல் சுரங்கப்பாதை 1967 நவம்பர் மாதம் 14 ஆம் திகதி சிங்கப் பாறை சுரங்கம் எனும் பெயரில் கட்டுமானப் பணிகள் நிறைவுபெற்று பொது போக்குவரத்திற்கு திறந்து வைக்கப்பட்டது. 1972 ஆம் ஆண்டு ஹொங்கொங்கில் முதல் கடலடி சுரங்கப்பாதை துறைமுகக் கடலடி குறுக்குச் சுரங்கம் எனும் பெயரில், கவுலூண் தீபகற்ப நிலப்பரப்பில் ஹுங் ஹாம் நகருக்கும் ஹொங்கொங் தீவுக்கும் இடையில், 1.86 கிலோ மீட்டர் தூரமுடைய கடலடிச் சுரங்கப் பாதை திறந்து வைக்கப்பட்டது. [4]

அதனைத் தொடர்ந்து பல நிலச் சுரங்கப்பாதைகளும், கடலடி சுரங்கப் பாதைகளும் தோற்றம் பெறத் தொடங்கின.

சுரங்கப் பாதைகளின் பட்டியல் தொகு

இவற்றையும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

வெளியிணைப்புகள் தொகு