2,3-டையைதரோதயோபீன்

வேதிச்சேர்மம்

2,3-டையைதரோதயோபீன் (2,3-Dihydrothiophene) என்பது SC4H6 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் பல்லின வளையங்களைக் கொண்ட ஒரு கந்தக கரிமச் சேர்மமாகும். 2,5-டையைதரோதயோபீன் சேர்மத்துடன் இது ஒரு சமபகுதிச் சேர்மமாக உள்ளது. இவ்விரு மாற்றியன்களும் தயோயீத்தர் போன்ற மணத்துடன் நிறமற்ற நீர்மங்களாகக் காணப்படுகின்றன. வேதி வினைகளைப் பொறுத்தவரையில் இரண்டுமே ஆல்க்கீன்கள், தயோயீத்தர்கள் போல கார்பன் அணுக்களில் கூட்டு வினைகளிலும். கந்தக அணுக்களில் ஆக்சிசனேற்ற வினைகளிலும் ஈடுபடுகின்றன. மாறாக தயோபீன் இவ்விருவகை வினைகளிலும் ஈடுபடுவதில்லை [1].

2,3-டையைதரோதயோபீன்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2,3-டையைதரோதயோபீன்
இனங்காட்டிகள்
1120-59-8 Y[pubchem]
ChemSpider 120627 Y
InChI
  • InChI=1S/C4H6S/c1-2-4-5-3-1/h1,3H,2,4H2 Y
    Key: OXBLVCZKDOZZOJ-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C4H6S/c1-2-4-5-3-1/h1,3H,2,4H2
    Key: OXBLVCZKDOZZOJ-UHFFFAOYAG
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 136880
  • C1CSC=C1
  • S1\C=C/CC1
பண்புகள்
C4H6S
வாய்ப்பாட்டு எடை 86.16 கி/மோல்
தோற்றம் நிறமற்ற நீர்மம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

இயற்கையில் டையைதரோதயோபீன்கள் தொகு

திரபுள் எனப்படும் வெண் பழக்காளான்களின் நறுமணத்திற்கு டையைதரோதயோபீன்கள் உதவுகின்றன. இத்தகைய காளான்களின் பழமாகும் உடல்பகுதியிலுள்ள பாக்டீரியாக்கள் 3-மெத்தில்-4,5-டையைதரோதயோபீனை உற்பத்தி செய்கின்றன. இதுவே அவற்றின் பெரும்பான்மையான உட்கூறாக உள்ளது[2].

மேற்கோள்கள் தொகு

  1. Shvekhgeimer, M. G. A. (1998). "Dihydrothiophenes. Synthesis and Properties (review)". Chemistry of Heterocyclic Compounds 34: 1101-1122. doi:10.1007/BF02319487. 
  2. Splivallo, R.; Ebeler, S. E. (2015). "Sulfur Volatiles of microbial origin are key contributors to human-sensed truffle aroma". Appl. Microbiol. Biotechnol. 99: 2583-92. doi:10.1007/s00253-014-6360-9. பப்மெட்:2557347. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=2,3-டையைதரோதயோபீன்&oldid=2782140" இலிருந்து மீள்விக்கப்பட்டது