2020 கோடைகால ஒலிம்பிக்கு போட்டியில் சதுரங்கம்

ஒலிம்பிக்கு விளையாட்டுகள்

2020 கோடைகால ஒலிம்பிக்கு போட்டியில் சதுரங்கம் (Chess at the 2000 Summer Olympics) ஓர் அதிகாரப்பூர்வமற்ற கண்காட்சி விளையாட்டாக இடம்பெற்றது. 2020 ஆம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக்கு கிராமத்தில் நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக்கு போட்டியில் சதுரங்க விளையாட்டு சேர்க்கப்பட்டது. இக்கண்காட்சிப் போட்டிகளில் இந்தியாவின் விசுவநாதன் ஆனந்தும் எசுப்பானியாவின் அலெக்சி சிரோவும் இரண்டு ஆட்டங்களில் விளையாடினார். இரண்டு போட்டிகளையும் பன்னாட்டு ஒலிம்பிக் குழு மேற்பார்வையிட்டது.[1][2] போட்டிகள் விரைவு சதுரங்கப் போட்டி வடிவத்தில் நடத்தப்பட்டன. ஒவ்வொரு வீரருக்கும் மொத்தம் 30 நிமிடங்கள் விளையாடும் நேரம் அனுமதிக்கப்பட்டது. இரண்டு ஆட்டங்களும் சமநிலையில் முடிந்தன.[3]

பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு 1999 ஆம் ஆண்டு பன்னாட்டு ஒலிம்பிக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டது.[4] 2000 ஆம் ஆண்டுக்கு முன்னரோ அல்லது அதற்குப் பின்னரோ ஒலிம்பிக் போட்டிகளில் சதுரங்கம் இடம்பெறவில்லை. இருப்பினும் இது பன்னாட்டு ஒலிம்பிக் குழுவால் நடத்தப்படும் 2023 ஒலிம்பிக் விளையாட்டு வாரத்தில் சேர்க்கப்பட்டது.[5]

மேற்கோள்கள் தொகு

  1. "GRANDMASTERS EXHIBIT SKILLS AT THE OLYMPICS". Sun Sentinel. 2000-10-01. பார்க்கப்பட்ட நாள் 2024-04-15.
  2. "Chess masters campaign for Olympic inclusion". BBC News. 2000-09-27. பார்க்கப்பட்ட நாள் 2024-04-15.
  3. Berry, Jonathan (2000-09-30). "CHESS". The Globe and Mail. பார்க்கப்பட்ட நாள் 2024-04-15.
  4. Zaccardi, Nick (2015-04-29). "Chess official: We'll use pieces made of ice to get into Winter Olympics". NBC Sports. பார்க்கப்பட்ட நாள் 2024-04-15.
  5. Barker, Philip (2023-07-30). "Chess to target cultural programme at Los Angeles 2028 Olympics". insidethegames.biz. பார்க்கப்பட்ட நாள் 2024-04-15.