2022 உக்ரைன் மீதான உருசியப் படையெடுப்பில் பெண்கள்

2022 உருசிய - உக்ரைனியப் போரில் பெண்களின் பங்கு

2022 உக்ரைன் மீதான உருசியப் படையெடுப்பில் பெண்கள் (Women in the 2022 Russian invasion of Ukraine) 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி முதல் பல்வேறு செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பல வழிகளில் பாதிக்கப்பட்டும் உள்ளனர்.[1][2][3][4][5]

2022 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 16 ஆம் தேதியன்று கீவ் மாநகரில் இரண்டு பெண்களுடன் உக்ரேனிய காவல்துறை அதிகாரி

எங்கள் எதிர்ப்பானது, எங்களின் எதிர்கால வெற்றியாக, குறிப்பாக பெண்ணிய முகத்தைப் பெற்றுள்ளது" என்று உக்ரைனின் முதல் பெண்மணியாகக் கருதப்படும் ஒலேனா இயெலென்சுகா கூறியுள்ளார். உக்ரைனின் பெண்கள் இராணுவத்தில் பணியாற்றியதற்காகவும், போர்க்காலங்களிலும் தங்கள் குழந்தைகளை வளர்த்ததற்காகவும், அத்தியாவசிய சேவைகளை வழங்கியதற்காகவும் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.[6]

பின்னணி தொகு

2014 ஆம் ஆண்டு உருசிய-உக்ரைனியப் போர் தொடங்கியதிலிருந்து உக்ரைய இராணுவத்தில் பெண்களின் பங்கேற்பு குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரித்து வருகிறது. ஆண்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்ட பல பதவிகள் பெண்களுக்கும் திறக்கப்பட்டன. இராணுவத்தில் மொத்த பெண்களின் எண்ணிக்கை இரட்டிப்பானது.[7] இருப்பினும், பாகுபாடு, துன்புறுத்தல் போன்றவை உக்ரைனிய இராணுவத்திற்குள் குறிப்பிடத்தக்க பிரச்சனைகளாக இருந்து வருகின்றன.[8][9][10] உக்ரைனியப் பெண் குடிமக்களும் போரின் போது குறிப்பிடத்தக்க ஆபத்துகளையும் பிரச்சினைகளையும் எதிர்கொண்டனர்.[11][12][13] உரோமா பெண்கள் குறிப்பிட்ட அளவிலான பாகுபாட்டை எதிர்கொண்டு பெரும்பாலும் உள்நாட்டில் இடம்பெயர்ந்த நிலை மறுக்கப்பட்டு தீவிர இனவெறிக்கு உள்ளாகிறார்கள்.[14] உலகளாவிய ரீதியில் பெண்களும் சிறுமிகளும் சமூகத்தில் உள்ள சாதாரண இடப்பெயர்வு மற்றும் முறிவுகள் காரணமாக அதிக ஆபத்தை எதிர்கொள்கின்றனர். பாலியல் வன்முறை என்பது போர், பயங்கரவாதம், சித்திரவதை மற்றும் அரசியல் அடக்குமுறை ஆகியவற்றில் ஒரு தந்திரமாகப் பயன்படுத்தப்படுகிறது.

பெண்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமான பெண்கள் ஒரு நெருக்கடியான சூழ்நிலையில் பாலின அடிப்படையிலான வன்முறையை அனுபவிக்கிறார்கள் என்று ஐநா அறிக்கை கூறுகிறது. மேலும் இலான்செட்டு மருத்துவ செய்தி இதழும் ஆயுத மோதலால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள் அதிக அளவு அதிர்ச்சிகரமான அனுபவங்களுக்கு ஆளாகிறார்கள் என்பதைக் கண்டறிந்துள்ளது.[15]

போர்க்குற்றங்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொகு

 
உக்ரைனின் கீவ் நகரில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தை உருசியப் படைகள் தாக்கியதில் முகத்தில் காயங்களுடன் ஒரு பெண்

உருசிய மற்றும் உருசிய முன்னணிப் படைகளால் உக்ரைனில் பாலியல் வன்முறை மற்றும் பிற மோதல்கள் முன்பு காணப்பட்டன. ஆயுத மோதலில் உள்ள பாலியல் வன்முறைத் தரவுகளின்படி , கிழக்கு உக்ரைனில் 2014 ஆம் ஆண்டு முதல் ஏழு ஆண்டுகளாக நடந்த மோதல்கள் மூன்றில் உருசிய துருப்புக்களுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கு எதிராக உரிமைகோரல்கள் உள்ளன. பெரும்பாலான அறிக்கைகள் தடுப்புக்காவலில் உள்ள தனிநபர்களிடமிருந்து நிகழ்ந்துள்ளன. உருசிய முன்னணிப் படைகள் சித்திரவதை மற்றும் தண்டனைக்கான வழிமுறையாக பிறப்புறுப்பு பகுதியில் அடித்தல் மற்றும் மின்சார அதிர்ச்சி, கற்பழிப்பு, கற்பழிப்பு அச்சுறுத்தல்கள், கட்டாய நிர்வாணம் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிரான கற்பழிப்பு அச்சுறுத்தல்கள் போன்ற நடைமுறைகளை உக்ரைனில் உள்ள மனித உரிமைகள் நடைமுறைகளுக்கான அமெரிக்க வெளியுறவுத்துறை 2020 அறிக்கை ஆவணப்படுத்தியுள்ளது. 2000 ஆம் ஆன்டுகளின் முற்பகுதியில் செச்சினியாவில் உருசியப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட பெரியவர்கள் மற்றும் இரு பாலினத்தைச் சேர்ந்த குழந்தைகளின் கூட்டுப் பலாத்காரம் மற்றும் கற்பழிப்பு வழக்குகளையும் அம்னெசுட்டி இன்டர்நேசனல் எனப்படும் பன்னாட்டு மன்னிப்பு அவை அமைப்பு அறிக்கை செய்தது.[16][17]

2022 படையெடுப்பில் பெண்கள் பாலியல் வன்முறைக்கு இலக்காகியுள்ளனர்.[18][19][20] உக்ரைனிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் லெசியா வாசிலென்கோ, அலோனா இசுக்ரம், மரியா மெசென்ட்சேவா மற்றும் ஒலேனா கோமெங்கோ ஆகியோர் உருசிய ஆக்கிரமிப்பு நகரங்களில் உள்ள பெரும்பாலான வயதான பெண்கள் கற்பழிப்பு அல்லது தங்கள் உயிரை மாய்த்துக் கொண்ட பிறகு தூக்கிலிடப்பட்டனர் என்று கூறினர்.[21] உருசியாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் அல்லது கடுமையான சண்டையின் கீழ் உள்ள பகுதிகளுடனான குறைவான தொடர்பு காரணமாக, பாலியல் வன்முறை வழக்குகளின் சரியான எண்ணிக்கையைக் கண்காணிப்பது அல்லது சரியான நேரத்தில் பதிலளிப்பது கடினமாக உள்ளது. உதவி கோரும் அவசரகால தொலைபேசி சேவையில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் பல அழைப்புகள் இருப்பதாக ஆட்கடத்தல், குடும்ப வன்முறை மற்றும் பாலியல் வன்கொடுமை ஆகியவற்றில் இருந்து தப்பியவர்களை ஆதரிக்கும் உக்ரைனியத் தொண்டு நிறுவனமான லா இசுட்ராடா என்ற அமைப்பின் தலைவர் கூருகிறார். ஆனால் சண்டையின் காரணமாக தொண்டு நிறுவனத்தால் அவர்களுக்கு நேரடியாகச் சென்று உதவ முடியவில்லை. உக்ரைனிய மற்றும் பன்னாட்டு அதிகாரிகள், சட்ட அமலாக்கம் மற்றும் ஊடகப் பணியாளர்கள் ஆகியோர்களிடம் அளிக்கப்பட்ட கும்பல் பலாத்காரம், துப்பாக்கி முனையில் தாக்குதல்கள் மற்றும் குழந்தைகள் முன்னிலையில் பாலியல் வன்முறை பற்றிய அறிக்கைகள் அனைத்தும் உருசிய துருப்புக்களால் திரும்பப் பெறப்பட்டன.[22] நகைகளை கழற்றி, தலையில் முக்காடு அணிந்து, வயதான பெண்மணிகள் போல் ஆடை அணிவதன் மூலம் தங்களை அழகற்றவர்களாக மாற்றிக் கொள்ளுமாறு பெண் கிராம மக்கள் எச்சரிக்கப்பட்டனர்.[23]

இப்படையெடுப்பில் உருசியப் படையினரின் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் பற்றிய முதல் அதிகாரப்பூர்வமான விசாரணை தொடங்கிய பின்னர், மார்ச்சு மாதம் 9 ஆம் தேதியன்று செவ்சென்கோவ் கிராமத்தில் தனது கணவர் கொல்லப்பட்டதாகவும், தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் கூறிய ஒரு பெண்ணின் பேட்டியை தி டைம்சு ஆஃப் லண்டன் பத்திரிகை 2022 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 28 ஆம் தேதி அன்று வெளியிட்டது. [24] உருசியப் படைகள் பல ஆயிரம் உக்ரைனியப் பெண்களையும் குழந்தைகளையும் நகரத்திலிருந்து உருசியாவிற்கு வலுக்கட்டாயமாக நாடு கடத்தியதாக மரியுபோல் நகர சபை கூறியுள்ளது.[25] மரியுபோல் மருத்துவமனை மீதான வான்வழித் தாக்குதலில் மரியுபோலில் உள்ள மகப்பேறு பிரிவு குறிவைத்து தாக்கப்பட்டது.[26] உக்ரைனிய மக்களிடையேயும் பாலியல் வன்முறைகள் பதிவாகியுள்ளன. உக்ரேனிய பிராந்திய பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த ஒரு நபர் வின்னிட்சியாவில் கைது செய்யப்பட்டார். அவர் அந்தப் பகுதியை விட்டு வெளியேற முயன்ற ஒரு பெண் ஆசிரியையை கற்பழிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.[22]

2022 ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் இவானோ-பிராங்கிவ்சுக் நகரம் பொதுமக்களுக்கு துப்பாக்கிப் பயிற்சிகளை வழங்கத் தொடங்கியபோது, பாலியல் வன்முறை குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் தற்காப்புக்காக ஆயிரக்கணக்கான பெண்கள் பதிவுசெய்தனர்.[27]

மேற்கோள்கள் தொகு

  1. Kelleher, Patrick (2022-03-18). "Russian bombs kills 'heroic, brave and courageous' Ukrainian LGBT+ activist" (in en-GB). PinkNews. https://www.pinknews.co.uk/2022/03/18/ukraine-russia-war-elvira-schemur-death-tribute-lgbt/. 
  2. Baker, Faima (2022-03-08). "5 Women To Follow On Social Media For An Insight Into Ukrainian Life Right Now" (in en). HuffPost. https://www.huffingtonpost.co.uk/entry/ukrainian-women-to-follow-to-get-a-real-insight-into-conflict_uk_622766e2e4b047f85a40b1c8. 
  3. Adebahr, Cornelius (2022-03-21). "What Germany's turning point means for its feminist foreign policy" (in en-US). Politico. https://www.politico.eu/article/germany-turning-point-feminist-foreign-policy/. 
  4. Moaveni, Azadeh; Nagarajan, Chitra (2022-03-15). "Another deeply gendered war is being waged in Ukraine" (in en). Al Jazeera. https://www.aljazeera.com/opinions/2022/3/15/another-deeply-gendered-war-is-being-waged-in-ukraine. 
  5. Olmstead, Molly (2022-03-03). "How Women Forced Ukraine to Welcome Them Into the Military" (in en). Slate. https://slate.com/news-and-politics/2022/03/ukraine-women-russia-putin-military.html. 
  6. Willsher, Kim (2022-03-22). "OlenaZelenska thanks other first ladies for supporting Ukraine" (in en). The Guardian. https://www.theguardian.com/world/2022/mar/22/olena-zelenska-thanks-first-ladies-supporting-ukraine. "Our resistance, as our future victory, has taken on a particularly feminine face. Women are fighting in the army, they are signed up to territorial defence [units], they are the foundation of a powerful volunteer movement to supply, deliver, feed ... they give birth in shelters, save their children and look after others' children, they keep the economy going, they go abroad to seek help. Others are simply doing their jobs, in hospitals, pharmacies, shops, transport, public services ... so that life continues.”" 
  7. "Women are changing the face of armed forces in Ukraine". UN Women | Europe and Central Asia (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-17.
  8. "Invisible in an invisible war". October 21, 2019.
  9. "What It's Like to Be a Female in the Ukrainian Army". en.hromadske.ua.
  10. "Ukrainian Women Face Tough Battle for Equality in Military | Voice of America - English". www.voanews.com.
  11. "Ukrainian women find themselves bearing the cost of endless war". The World from PRX.
  12. Nidzvetska, Svitlana; Rodriguez-Llanes, Jose M.; Aujoulat, Isabelle; Gil Cuesta, Julita; Tappis, Hannah; van Loenhout, Joris A. F.; Guha-Sapir, Debarati (January 9, 2017). "Maternal and Child Health of Internally Displaced Persons in Ukraine: A Qualitative Study". International Journal of Environmental Research and Public Health 14 (1): 54. doi:10.3390/ijerph14010054. பப்மெட்:28075363. 
  13. "'Failed By The System': Women In Eastern Ukraine At 'Heightened Risk' Of Gender-Based Violence". RadioFreeEurope/RadioLiberty.
  14. "Roma women and girls in war zones need special protection". April 7, 2021.
  15. Dastagir, Alia E. (March 20, 2022). "Terrified children, men left behind, sex trafficking: Women in Ukraine fight a different kind of war". USA TODAY (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-29.
  16. US Department of State (2021). "2020 Country Reports on Human Rights Practices: Ukraine". United States Department of State (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-04-11.
  17. Hallsdottir, Esther (March 24, 2022). "Are Russian troops using sexual violence as a weapon? Here's what we know.". The Washington Post. https://www.washingtonpost.com/politics/2022/03/24/russia-ukraine-military-sexual-violence-rape/. 
  18. Goodman, Amy. "Ukrainian Activist: War Brings Rise in Sexual Violence and Anti-Trans Oppression". Truthout. பார்க்கப்பட்ட நாள் 2022-03-29.
  19. Jankowicz, Mia. "Ukraine prosecutor-general says Russian soldiers raped a woman after breaking into her home and killing her husband". Business Insider (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-29.
  20. Engelbrecht, Cora (29 March 2022). "Reports of sexual violence involving Russian soldiers are multiplying, Ukrainian officials say" (in en-US). The New York Times. https://www.nytimes.com/2022/03/29/world/europe/russian-soldiers-sexual-violence-ukraine.html. 
  21. "Ukrainian MPs Detail Disturbing Sexual Violence Perpetrated by Russian Soldiers". Jezebel (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-29.
  22. 22.0 22.1 McKernan, Bethan (2022-04-04). "Rape as a weapon: huge scale of sexual violence inflicted in Ukraine emerges". the Guardian (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-04-11.
  23. Rubinsztein-Dunlop, Sean; Hemingway, Phil (7 April 2022). "Ukraine thought Bucha would represent the worst of Russian atrocities. New horrors awaited them in Berestyanka". ABC News இம் மூலத்தில் இருந்து 7 April 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220407033414/https://www.abc.net.au/news/2022-04-07/fears-for-ukrainian-town-of-berestyanka/100972266. 
  24. Tangalakis-Lippert, Katherine (28 March 2022). "A Ukrainian woman recounts being raped by Russian soldiers who killed her husband: 'Shall we kill her or keep her alive?'". Business Insider (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-29.
  25. "Ukraine crisis: claims Mariupol women and children forcibly sent to Russia". the Guardian (in ஆங்கிலம்). 2022-03-20. பார்க்கப்பட்ட நாள் 2022-03-29.
  26. Groppe, Rick Rouan, Joey Garrison and Maureen. "'Horrifying.' Russia strike on Ukraine maternity hospital draws outrage as civilian war toll rises". USA TODAY (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-29.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
  27. Cundy, Antonia (2022-04-25). "'Women need to be ready': the Ukrainian city where mums and daughters are learning to shoot". The Guardian. https://www.theguardian.com/global-development/2022/apr/25/women-need-to-be-ready-the-ukrainian-city-where-mums-and-daughters-are-learning-to-shoot.