ஃபவுலர் கரைசல்

ஃபவுலர் கரைசல் (Fowler's solution) என்பது 1% பொட்டாசியம் ஆர்சனைட்டைக் (KAsO2) கொண்டுள்ள ஒரு கரைசலாகும். ஒரு காலத்தில் இக்கரைசல், நோய்க்கான பரிகாரம் அல்லது சத்து மருந்து என்று கருதப்பட்டது. இங்கிலாந்து நாட்டின் சிடாஃபோர்டு நகரைச் சேர்ந்த தாமசு ஃபவுலர், 1786 ஆம் ஆண்டு காப்புரிமை பெற்ற ஒரு மருந்து, சுவையற்ற குளிர்காய்ச்சல் சொட்டு மருந்துக்கு மாற்றாக இதை முன்மொழிந்தார்.[1] 1845 ஆம் ஆண்டு முதல் இரத்தப்புற்று நோய்ச் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படுகிறது .[1]

1905 ஆம் ஆண்டு முதல் கனிம ஆர்சனிக் சேர்மங்களின் பயன்பாடு குறைந்து கரிம ஆர்சனிக் சேர்மங்களின் பக்கம் பார்வை திரும்பியது. அட்டாக்சில் முதலாவது கரிம ஆர்சனிக் சேர்மமாகும்[2] . 1950 ஆம் ஆண்டு வரையிலும் கூட அமெரிக்காவில் ஃபவுலர் கரைசல் மலேரியா, வலிப்பு, மேகப்புண் போன்ற சில நோய்களுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

ஆர்சனிக் சேர்மங்கள் நச்சுத்தன்மை கொண்டவை என்பதாலும் இவை பக்க விளைவுகள் கொண்ட புற்று நோயூக்கிகள் என்பதாலும்ஃபவுலர் கரைசல் பயன்பாடு குறைந்துவிட்டது. ஆர்சனிக் மூவாக்சைடு மருந்து இரத்தப்புற்று நோய்க்கு உரிய மருந்து என அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் 2001 ஆம் ஆண்டு பரிந்துரை செய்ததைத் தொடர்ந்து மீண்டும் ஆர்சனிக்கல் மருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன[3] and interest in arsenic has returned.[4]).

மேற்கோள்கள்

தொகு

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஃபவுலர்_கரைசல்&oldid=2748496" இலிருந்து மீள்விக்கப்பட்டது