பைசாபாத் மாவட்டம்

(ஃபைசாபாத் மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பைசாபாத் மாவட்டம் இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் பைசாபாத் நகரில் உள்ளது. இந்த மாவட்டம் 2,764 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் அயோத்தி நகரில் இராமர் பிறந்த இடம் அமைந்துள்ளது. மேலும் பாபர் மசூதி இருந்தது. மாவட்டத் தலைநகரான பைசாபாத் நகரில் டாக்டர். இராம் மனோகர் லோகிய அவத் பல்கலைகழகம் அமைந்துள்ளது.

Uttar Pradesh district location map Faizabad.svg
பைசாபாத்மாவட்டத்தின் இடஅமைவு உத்தரப் பிரதேசம்
மாநிலம்உத்தரப் பிரதேசம், இந்தியா
நிர்வாக பிரிவுகள்பைசாபாத் கோட்டம்
தலைமையகம்பைசாபாத்
பரப்பு2,799 km2 (1,081 sq mi)
மக்கட்தொகை2,468,371 (2011)
மக்கள்தொகை அடர்த்தி1,054/km2 (2,730/sq mi)
படிப்பறிவு70.63 %
பாலின விகிதம்961
மக்களவைத்தொகுதிகள்பைசாபாத்
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

மக்கள் தொகைதொகு

2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது, 2,468,371 மக்கள் வாழ்ந்தனர். [1] சராசரியாக சதுர கிலோமீட்டருக்கு 1054 மக்கள் வாழ்கின்றனர். [1] சராசரியாக ஆயிரம் ஆண்களுக்கு 961 பெண்கள் என்ற அளவில் பால் விகிதம் உள்ளது. [1] இந்த மாவட்டத்தில் வாழ்பவர்களில் 70.63% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர். [1]

இதனையும் காண்கதொகு

சான்றுகள்தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 "District Census 2011". Census2011.co.in (2011). பார்த்த நாள் 2011-09-30.

இணைப்புகள்தொகு

ஆள்கூறுகள்: 26°47′N 82°08′E / 26.783°N 82.133°E / 26.783; 82.133

"https://ta.wikipedia.org/w/index.php?title=பைசாபாத்_மாவட்டம்&oldid=2672213" இருந்து மீள்விக்கப்பட்டது