அகிர்வால் (Ahirwal) என்பது தெற்கு அரியானா மற்றும் வடகிழக்கு ராஜஸ்தானின் சில பகுதிகளை உள்ளடக்கிய ஒரு பகுதி ஆகும். இவை இரண்டும் இந்தியாவில் இன்றைய மாநிலங்கள் ஆகும்.[1] இந்தப் பகுதி முன்பு சிறிய வேள் பகுதியாகரேவாரி பகுதியினை மையமாகக்கொண்டு யதுவன்சி அகிர் சமூகத்தினால் முகலாயப் பேரரசு வீழ்ச்சியின்போது ஆட்சி செய்யப்பட்டது.[2]

அகிர்வால்
ஆள்கூறுகள்: 28°12′N 76°36′E / 28.2°N 76.6°E / 28.2; 76.6
நாடுஇந்தியா
மாநிலங்கள்
மொழி
 • அலுவல்இந்தி
 • மொழிகள்அகிர்வதி

புவியியல் தொகு

அகிர்வால் என்பது "அகிர்களின் நிலம்" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.[3] ஜெ. ஈ. சுவார்ட்ஸ்பெர்க் இதை "நாட்டுப்புறப் பகுதி"[4] என்றும் லூசியா மிச்செலுட்டி "கலாச்சார-புவியியல் பகுதி" என்றும் விவரித்தனர். இது ராஜஸ்தானின் அல்வார், பரத்பூர் மாவட்டப் பகுதிகளையும் அரியானா மாநிலத்தில் உள்ள மகேந்திரகர், ரேவாரி, குர்கான் பகுதிகளையும் உள்ளடக்கியது.[3] தெற்கு அரியானாவில் உள்ள அகிர்வால் பகுதியில் 11 சட்டமன்றத் தொகுதிகள் மூன்று மக்களவைத் தொகுதிகளில் பரவியுள்ளன. பிவானி-மகேந்திரகர், குர்கான் மற்றும் ரோத்தக் (ஒரு பகுதி மட்டும்) பகுதியில் கணிசமான அகிர் வாக்காளர்கள் உள்ளனர்.[5]

மொழி தொகு

அகிர்வால் பகுதியில் பேசப்படும் முக்கிய மொழி அகிர்வதி ஆகும். இது பொதுவாக மேவதியின் பேச்சுவழக்காக எடுத்துக் கொள்ளப்பட்டு இராச்சசுத்தானி மொழிகளின் குழுவிற்குள் வகைப்படுத்தப்படுகிறது. இம்மொழி அண்டைய மேற்கத்திய இந்தி வகைகளுடன் பொதுவான பண்புகளையும் கொண்டுள்ளது.[6] இம்மொழியுடன் நெருங்கிய தொடர்புடைய பாங்குருவும் (அரியான்வி) இந்தியும் இப்பகுதியில் பேசப்படுகின்றன.

1962ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி ரெசாங் லா போரில் அகிர்வால் சேர்ந்த பல வீரர்கள் போரிட்டனர். இவர்களின் எண்ணிக்கை சீனர்களைவிட அதிகமாக இருந்தது.[7][8]

மேலும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Singh, Jai Pal; Khan, Mumtaz (1999). "Hindu Cosmology and the Orientation and Segregation of Social Groups in Villages in Northwestern India". Geografiska Annaler. B (Human Geography) (Wiley on behalf of the Swedish Society for Anthropology and Geography) 81 (1): 27–28. doi:10.1111/j.0435-3684.1999.00046.x.  (subscription required)
  2. Haynes, Edward S. (1978). "Imperial Impact on Rajputana: The Case of Alwar, 1775–1850". Modern Asian Studies (Cambridge University Press) 12 (3): 423–424. doi:10.1017/s0026749x00006223. https://archive.org/details/sim_modern-asian-studies_1978-07_12_3/page/423.  (subscription required)
  3. 3.0 3.1 Michelutti, Lucia (2008). The vernacularisation of democracy: politics, caste, and religion in India. Routledge. பக். 41–42. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780415467322. https://archive.org/details/vernacularisatio0000mich. 
  4. Schwartzberg, J. E. (1985). "Folk regions in northwestern India". in Mukerji, A. B.; Ahmad, A.. India: Culture Society and Economy. New Delhi: Inter India Publications. பக். 205–235. 
  5. "Gurgaon MP's exit to change political equation in south Haryana". Hindustan Times. 24 September 2013. Archived from the original on 3 December 2013. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-12-03. பார்க்கப்பட்ட நாள் 2021-12-30.
  6. Yadav, Shankar Lal (c. 1979). "Ahīrvāṭī". in Sharada, Sadhu Ram (in Hindi). Hariyāṇā kī upabhāṣāeṃ. Chandigarh: Bhasha Vibhag. பக். 193–269. 
  7. "Land Forces Site – Unforgettable Battle of 1962 : 13 Kumaon at Rezang La". Bharat Rakshak. Archived from the original on 22 February 2014. பார்க்கப்பட்ட நாள் 6 January 2014.
  8. Mohan Guruswamy (20 November 2012). "Don't forget the heroes of Rezang La". The Hindu.

மேலும் படிக்க தொகு

  • The Panjab Past and Present. 32. Department of Punjab Historical Studies, Punjabi University. 2001. பக். 71–75. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகிர்வால்&oldid=3661875" இலிருந்து மீள்விக்கப்பட்டது