அகில்யாபாய் ஓல்கர்

ஓல்கர் வம்சத்தின் பேரரசி

மகாராணி அகில்யா பாய் ஓல்கர் (31 மே 1725 – 13 ஆகத்து 1795),   ஓல்கர் வம்சத்தின் பேரரசியாவார். இவர் மராட்டியப் பேரரசின் இந்தூர் அரசை ஆட்சி செய்தவராவார். இவர் அகமத்நகரிலுள்ள சாம்கெட் என்னும் நகரின், இச்சோண்டி கிராமத்தில் பிறந்தவர் ஆவார். இவர் ஆட்சியில் தலைநகரத்தை இந்தோரின் தெற்கில் நருமதையில் அமைந்துள்ள மகேசுவருக்கு மாற்றினார்.

மகாராணி அகில்யா பாய் ஓல்கர்
மகாராணி ஸ்ரீமந்த் அகந்த் சவுபாக்கியவதி அகில்யா பாய் சாகிபா
இந்தூர் அரசின் மகாராணி
ஆட்சிக்காலம்1 திசம்பர் 1767 – 13 ஆகத்து 1795
முடிசூட்டுதல்11 திசம்பர் 1767
முன்னையவர்மாலேராவ் ஓல்கர்
பின்னையவர்துகோசி ராவ் ஓல்கர்
பிறப்பு(1725-05-31)31 மே 1725
க்ராம் இச்சோண்டி, சாம்கெட், அகமத்நகர், மகாராட்டிர மாநிலம், இந்தியா
இறப்பு(1795-08-13)13 ஆகத்து 1795
துணைவர்கண்டே ராவ் ஓல்கர்
பெயர்கள்
அகில்யா பாய் சாகிபா ஓல்கர்
மரபுஓல்கர் வம்சம்
தந்தைமான்கோசி சின்டே
மதம்இந்து மதம்

ஆட்சிப் பகுதி

தொகு

அகில்யாபாயின் கனவர் காண்டே ராவ் ஓல்கர், கும்பர் போரில் 1754-ல் உயிரிழந்தார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு இவருடைய மாமனார் மல்கர் ராவும் காலமானார். அதன்பிற்கு ஓராண்டு கழித்து இந்தூர் அரசியாக முடிசூட்டப்பட்டார். இவர் தன்னுடையா அரசை வழிப்பறிக் கொள்ளையர்களிடம் இருந்து காக்க பாடுபட்டார். இவர் தன்னுடைய போர்படையை வழிநடத்துவதிலும் தன்னுடைய வீரத்தை காட்டினார். இவர் துகோசி ஓல்கரை தன்னுடைய தளபதியாக நியமித்தார். இவரது 30 ஆண்டு ஆட்சிக்காலத்தில் முறையான நிர்வாகமும், நல்லதொரு ஆட்சியுமாக நடத்தினார், இவர் வாழும்போது மரியாதையுடனும், இறந்த பிறகு துறவிபோலவும் கருதப்பட்டார்.[1]

கட்டிய கோயில்கள் மற்றும் கோட்டைகள்

தொகு

அகில்யாபாய் கட்டிடக்கலைநுட்பத்தில் ஆர்வமுள்ளவராக இருந்தார். இவர் இந்தோர், மகேசுவர் பகுதிகளில் பல கோயில்களை நிறுவினார். இவருடைய ஆட்சிப்பகுதியில் மட்டுமின்றி பல்வேறு இடங்களில் கோயில்கள், தர்மசாலை எனப்படும் ஓய்வு விடுதிகள் ஆகியவற்றை உருவாக்கினார். கிழக்கே இந்துக்களின் முக்கிய தளமான குசராத்திலுள்ள துவாரகை முதல், கங்கை நதிக்கரையிலுள்ள காசி விசுவநாதர் கோயில் வரையிலும், உஜ்ஜையின், நாசிக், விஷ்ணுபாத் கோயில், கயா மற்றும் பாராலி பைஜ்னாத் ஆகிய மகாராட்டிரப் பகுதியிலும் தனது கோயில்களை கட்டினார். சோமநாதபுரத்தில் பாழடைந்த சிவன் கோயிலை மீண்டும் கட்டி குடமுழுக்கு செய்தார். அரசர்களில் அக்பரை குறிப்பிடுவது போல, பேரரசிகளில் முக்கியமானவர் இவரென குறிப்பிடப்படுகிறது.[2]

இந்திய அரசின் மரியாதை

தொகு

இந்திய அரசு அகில்யாபாய் ஓல்கருக்கு மரியாதை அளிக்கும் விதமாக இந்தோர் விமான நிலையத்திற்கு, தேவி அகில்யாபாய் ஓல்கர் விமான நிலையம் என பெயர் சூட்டியுள்ளது[3]. அதுமட்டுமின்றி, 1999-ம் ஆண்டு ஆகத்து 25-ம் நாள் இவருடைய படத்தை அஞ்சல் தலையில் பொறித்து மரியாதை செய்துள்ளது.[4]

நூல்கள்

தொகு
மராத்தியில்
  • புன்யசுலோக் அகில்யா - திகோர் - கும்தேவாலே
  • அகில்யாபாய் - இர்லால் சர்மா
  • அகில்யாபாய் சரித்ரா  - புருசோத்தம்
  • அகில்யாபாய் சரித்ரா - முகுந்த் வாமன் பார்வே
  • கர்மயோகினி  - விசயா சகாதிர்தர்
  • தன்யாத் அதன்யாத் அகில்யாபாய் ஓல்கர் - வின்யா காடேபேகர்
  • பால் சமாச் - சமாச்

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Jawaharlal Nehru:Discovery of India, 2004, page-304
  2. Quote of an English writer given in the Book Ahilya Bai Holkar by Khadpekar
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-05-02. பார்க்கப்பட்ட நாள் 2015-08-13.
  4. http://www.indianpost.com/viewstamp.php/Alpha/A/AHILYABAI%20HOLKAR

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகில்யாபாய்_ஓல்கர்&oldid=3540463" இலிருந்து மீள்விக்கப்பட்டது