அகில பாரத வித்தியார்த்தி பரிசத்

அகில பாரத வித்தியார்த்தி பரிசத் (எபிவிபி) - (Akhil Bharatiya Vidyarthi Parishad-ABVP) (ஆங்கில மொழி: All Indian Student Council), வலதுசாரி சிந்தனை கொண்ட கல்வி நிலைய மாணவர்களின் அகில இந்திய அமைப்பாகும். இவ்வமைப்பின் பெயரை சுருக்கமாக "எபிவிபி" என்று அழைப்பர். இவ்வமைப்பு இந்தியாவின் மிகப்பெரிய மாணவர் அமைப்பாகச் செயல்படுகிறது.[1].[2]

அகில பாரதிய வித்தியார்த்தி பரிசத்
अखिल भारतीय विद्यार्थी परिषद
சுருக்கம்ABVP / எபிவிபி
குறிக்கோள் உரைஅறிவு-நற்குணம்-ஒற்றுமை (Knowledge-Character-Unity)
உருவாக்கம்1948
வகைமாணவர் அமைப்பு
தலைமையகம்மும்பை, மகாராஷ்டிரம், இந்தியா
தேசியத் தலைவர்
டாக்டர். நரேஷ் தாக்கூர் மார்
தேசியப் பொதுச் செயலர்
ஸ்ரீஹரி பொரிக்கர்
அமைப்புச் செயலர்
சுனில் அம்பேத்கர்
மைய்ய அமைப்பு
ராஷ்ட்டிரிய சகஸ்திரசக்தி (Rashtriya Chhatrashakti)
வலைத்தளம்www.abvp.org

வரலாறுதொகு

இவ்வமைப்பு 1948இல் துவக்கி, 9 சூலை 1949இல் பதிவு செய்யப்பட்டது. 1958இல் மும்பைக் கல்லூரி பேராசிரியர் யஷ்வந்தராவ் கேல்கர் இவ்வமைப்பினை கட்டமைப்பதில் பெரும் பங்காற்றினார். [3].இந்தியாவின் அனைத்து பல்கலைக்கழகங்களில் எபிவிபி அமைப்பின் கிளைகள் தொடங்கப்பட்டது.[4]ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின், மாணவர் அணியாக எபிவிபி செயல்படுகிறது.[5][6] பாரதிய ஜனதா கட்சியின் இளஞர் அமைப்புடன் செயல்படுகிறது.[7][8]

எபிவிபி-யால் துவக்கப்பட்ட துணை அமைப்புகள்தொகு

 • உலக மாணவர்கள் & இளைஞர்கள் அமைப்பு (WOSY)
 • மாணவர்களுக்கான வளர்ச்சி அமைப்பு (SFD)[9]
 • மாநிலங்களுக்கிடையே மாணவர்களின் அனுபவ வாழ்க்கை (SEIL)

நூல் வெளியிடுகள்தொகு

மாதந்தோறும் புது தில்லியிலிருந்து இந்தியில் வெளியாகும் "ராஷ்டிரிய சாத்திரசக்தி" இதழ் எபிவிபியின் அலுவல்முறை வெளியீடாகும்[10] வெவ்வேறு தேசிய விவகாரங்கள் குறித்தும் எபிவிபி துண்டறிக்கைகளை வெளியிட்டு வருகிறது.

படக்காட்சியகம்தொகு

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

 1. Foundation; retrieved 31 March 2011
 2. [1] retrieved on 5 September 2014
 3. "ABVP history". Abvp.org. பார்த்த நாள் 2013-05-06.
 4. ABVP largest in world
 5. "ABVP not a student wing of mim". Indiatoday.intoday.in (2011-10-13). பார்த்த நாள் 2013-05-06.
 6. ABVP leaders
 7. Protests by BJYM, ABVP mar ICET counselling
 8. BJYM, ABVP protest against incursion by Chinese
 9. SFD a forum of ABVP
 10. "Обновление FLV Player". Abvp.org. பார்த்த நாள் 2013-05-06.

மேலும் படிக்கதொகு

வெளி இணைப்புகள்தொகு