அக்கி ரொட்டி

அக்கி ரொட்டி (கன்னடம்: ಅಕ್ಕಿ ರೊಟ್ಟಿ) இந்தியாவின், கர்நாடகத்தின் தனித்துவமான அரிசி சார்ந்த காலை உணவு ஆகும். அக்கி ரொட்டி என்ற கன்னடச் சொல்லின் பொருள் "அரிசி ரொட்டி" என்பதாகும். அரிசி மாவில் உப்பையும், நீரையும் கலந்து மென்மையாகும்வரை நன்றாகப் பிசையப்படுகிறது. வெங்காயம், கேரட், நறுக்கப்பட்ட வெந்தய இலைகள், நறுக்கப்பட்ட கொத்தமல்லித் தழை, சீரகம், எள் ஆகியவற்றைத் தேவைப்பட்டால் மாவைப் பிசையும்போது சேர்க்கலாம். எண்ணெய் தடவப்பட்ட ஒரு தோசைக் கல்லில் மாவை இட்டுக் கைகளால் அழுத்தி மெல்லிய ரொட்டியாகத் தட்டவேண்டும். சிறிய அளவு எண்ணெயை ரொட்டி முழுவதும் தடவி, ரொட்டியை பொன்நிறமாகும்வரை வேகவைக்கப்படுகிறது. இப்போது அக்கி ரொட்டி சூடாக பரிமாறப்படுகிறது, சட்னியை தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். அக்கி ரொட்டியானது வெண்ணெய் அல்லது நெய் ஆகியவற்றைச் சேர்த்தும் செய்யலாம். இரவில் மிச்சமாகும் சோற்றையும் அதற்கு இணையாக அரிசி மாவையும் சேர்த்து அரைத்துக் கொண்டு அதில் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்துப் பிசைந்து தோசைக்கல்லில் இட்டு ஒரு பக்கம் சுட்ட பின்னர் அந்த ரொட்டியை எடுத்து இடுக்கியின் துணையுடன் அப்படியே அடுப்பில் உள்ள தீயில் வாட்டி வேகவைத்தும் வேறுமுறையில் செய்து பரிமாறுவார்கள்.[1][2][3]

அக்கி ரொட்டி
தொடங்கிய இடம்இந்தியா
பகுதிகர்நாடகம்
பரிமாறப்படும் வெப்பநிலைசூடாக
முக்கிய சேர்பொருட்கள்அரிசி மாவு, தண்ணீர்

மேற்கோள்கள்

தொகு
  1. Saee Koranne-Khandekar (2016). Crumbs! Bread Stories and Recipes for the Indian Kitchen. Hachette India. p. 22.
  2. Arathi Kannan (2011). From the South: Delectable Home Cooking. DC Books Limited. p. 50.
  3. Saee Koranne-Khandekar (2016). Crumbs! Bread Stories and Recipes for the Indian Kitchen. Hachette India. p. 220.

இதையும் காண்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்கி_ரொட்டி&oldid=4098550" இலிருந்து மீள்விக்கப்பட்டது