அக்கீயர் (பழங்குடியினர்)
அக்கீயர் (Achaeans (/əˈkiːənz/; கிரேக்க மொழி: Ἀχαιοί, Akhaioi) என்பவர்கள் மரபார்ந்த கிரேக்கத்தின் நான்கு முக்கிய பழங்குடியினரில் (மற்றவர்கள் ஏயோலியன்கள், அயோனியர்கள், டோரியன்களுடன்) ஒரு இனத்தவராவர். எசியோடு சீரமைத்த அடித்தளத் தொன்மக் கதையின்படி, இவர்களின் பெயர் அச்சேயன் பழங்குடியினரின் தொன்மவியல் நிறுவனரான அச்செயஸிலிருந்து வந்தது. அவர் குசுதசின் மகன்களில் ஒருவராகவும், அயோனியன் பழங்குடியினரின் நிறுவனர் அயோனின் சகோதரராகவும் கருதப்படுகிறார். குசுதஸின் கிரேக்க ( ஹெலனிக் ) தேசத்தின் தொன்மவியல் குடி முதல்வரான ஹெல்லனின் மகன் ஆவார்.[1]
வரலாற்று ரீதியாக, அச்சேயன் பழங்குடியினர் கிரேக்கத்தின் வடபகுதியில் உள்ள தெஸ்சாலி (Theassaiy) பகுதியில் இருந்து தென்பகுதியில் உள்ள பெலோபொன்னீசில் உள்ள அச்சேயா பகுதிக்கு குடியேறி வசித்து வந்தனர். இவர்கள் பொதுவாக கிரேக்கர்கள் என்றே அழைக்கப்படனர். ஆனால் இவர்கள் கிரேக்கர்களில் ஒரு பிரிவினராக அக்கீயர்களாவர். இவர்கள் பெலோபொன்னீசில் குடியேறுவதற்கு முன்பே அப்பகுதியில் பெலான்சியர் என்னும் பூர்வ குடியினர் இனத்தவர் வாழ்ந்துவந்தனர். என்றாலும் அக்கீயர் வந்து குடியேறிய பகுதி (பின்னர் கிரேக்கம் முழுவதும்) அக்கீயா என்று சிலகாலம் வரை அழைக்கப்பட்டது.[2] இவர்கள் கிமு 710 இல் கிரோட்டன் (Κρότων) நகரத்தை நிறுவிய தெற்கு இத்தாலியின் கிரேக்க குடியேற்றத்தில் அச்சேயர்கள் தீவிர பங்கு வகித்தனர். பித்தகோரியன் பள்ளி நிறுவப்பட்ட இடமாக இந்த நகரம் பிற்காலத்தில் புகழ் பெற்றதாக ஆனது. [3] மற்ற பெரிய பழங்குடியினரைப் போலல்லாமல் (அயோனியர்கள், டோரியன்கள் மற்றும் ஏயோலியன்கள்), மரபார்ந்த காலத்தில் அச்சேயர்கள் ஒரு தனி பேச்சுவழக்கை கொண்டிருக்கவில்லை இல்லை, அதற்கு பதிலாக டோரிக் கிரேக்க பேச்சுவழக்கைக் கொண்டிருந்தனர்.
குறிப்புகள்
தொகு- ↑ Apollodorus, Library I, 7.3.
- ↑ வெ. சாமிநாதசர்மா (1955). கிரீஸ் வாழ்ந்த வரலாறு. புதுக்கோட்டை: பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம். pp. 31–32.
- ↑ Peoples, Nations and Cultures. Editor John Mackenzie. Weidenfeld & Nicolson. 2005.