அங்குசெட்டிப்பாளையம் ஊராட்சி

அங்குசெட்டிபாளையம் ஊராட்சி (Anguchettipalayam Gram Panchayat), தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி வட்டாரத்தில் அமைந்துள்ளது. பண்ருட்டியில் இருந்து மேற்கு திசையில் 3 கி மீ தொலைவில் அமைந்துள்ளது அங்குசெட்டிபாளையம் இங்கு விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு வாழும் பசுமையான கிராமம். இங்கு அரசு உயர்நிலை பள்ளி உள்ளது. அதன் அருகாமையில் ஊராட்சி மன்ற அலுவலகமும் உள்ளது. இங்கு பேருந்து நிறுத்தம் அருகே காந்தி சிலையின் உருவம் அமைந்துள்ளது. அங்குசெட்டிபளையம் கிராமம் சேலம் செல்லும் வழியில் பிரதான சாலையில் அமைந்துள்ளது.