அசல் ஏரி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அசல் ஏரி (Lake Assal) மத்திய சிபூட்டியில் உள்ள ஒரு எரிமலை கிண்ணக்குழி ஏரி, தஞ்சோரா பகுதியின் தெற்கு எல்லையில் டானிக்கில் பாலைவனத்தில் அமைந்துள்ளது. இவ் ஏரியானது சிபூட்டி நாட்டின் தலைநகரான சிபூட்டி நகரில் இருந்து மேற்கே 120 கி.மீ துரத்தில் அமைந்துள்ளது. அசல் ஏரி கடல் மட்டத்தில் இருந்து 155 மீ. கீழே அமைந்துள்ளது, ஆகையால் இதுவே ஆபிரிக்க கண்டத்தில் மிகவும் தாழ்வான பகுதியாகும். இதன் நீளம் 19 கி.மீ. அகலம் 7 கி.மீ.,நீரேந்து பிரதேசம் 900 கி.மீ2 ஆகும்.அசல் ஏரி உலகிலையே அதிகூடிய உப்புத்தன்மை கூடியதாக காணப்படுகிறது. இதன் உப்புத்தன்மை 40% ஆகும்.