அசாமில் கல்வி

அசாம் மாநிலத்தில் கல்வி நிலை

அசாம் என்பது வடகிழக்கு இந்தியாவில் உள்ள ஒரு மாநிலமாகும். 2011 ஆம் ஆண்டில், அசாமின் எழுத்தறிவு விகிதம் 73.18% (78.81% ஆண்கள் மற்றும் 67.27% பெண்கள்) என மதிப்பிடப்பட்டுள்ளது. அசாமின் கல்வியறிவு விகிதம் தேசிய சராசரியான 74.04% ஐ விட சற்றுக் குறைவாக உள்ளது.

பொது

தொகு
 
அசாம், லக்கிகஞ்சு உயர்நிலைப் பள்ளி, வகுப்பறையில் பள்ளிக் குழந்தைகள்,

அசாமில் பள்ளிக் கல்வி [1] முன்-தொடக்க, தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் மூலம் கற்பிக்கப்படுகிறது [2] அசாம் அரசு 18 வயது வரையிலான மாணவர்களுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வியை அமல்படுத்தியுள்ளது. அசாமில் உள்ள பள்ளிகள் அரசு அல்லது தனியார் நிறுவனங்களின் நிர்வாகத்தின் கீழ் நடைபெறுகின்றன. தொடக்கப் பள்ளிகளில் பாடத்திட்டம் அசாம் தொடக்கக் கல்வி இயக்குநரகத்தால் நிர்வகிக்கப்படுகிறது.

போதிக்கும் மொழிகள்

தொகு

அசாமிய மொழி, போடோ, வங்காளம், ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பாடம் கற்பிக்கபப்டுகிறது. பல அரசு , அரசு உதவிபெறும் மற்றும் சிபிஎஸ்சி பள்ளிகளில் ஆங்கிலம் போதனை மொழியாக உள்ளது.

சான்றுகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசாமில்_கல்வி&oldid=3807400" இலிருந்து மீள்விக்கப்பட்டது