முதன்மை பட்டியைத் திறக்கவும்

மரியா அசிதா கிராஸ்ட்டா (Maria Ashitha Crasta, 3 அக்டோபர் 1984 இல் பிறந்தவர்) ஒரு இந்திய மாடல் மற்றும் நடிகை ஆவார்.

பொருளடக்கம்

பிறப்பும் ,இளமைப்பருவமும்தொகு

மரியா அசிதா கிராஸ்ட்டா என்ற இயற் பெயர் கொண்ட அசிதா மாடல் அழகி மற்றும் நடிகையும் ஆவார். இவர் லோவிஸ் மற்றும் ஜெனீஃபர் க்ராஸ்டா தம்பதியரின் மகளாவார் . மும்பையில் பிறந்த இவர் பின்னர் பெங்களூருக்கு குடி பெயர்ந்தார்.

15 வயதில் இருந்து அவர் நடனம் மற்றும் மாடலிங் நிகழ்ச்சிகளில் பிராந்திய மட்டத்தில் பங்குபெற்றார், மேலும் அவரது திறமைக்காக பல பரிசுகளையும் பெற்றார். - அசிதா மவுண்ட் கார்மெல் நிர்வாக துறை கல்லூரியில் படித்து நிர்வாக இயலில் முதுகலைப் பட்டத்தை பெற்றார்.

அழகிப்போட்டியில் மேன்மைதொகு

பதினாறாம் வயதில் அசிதா தனது முதல் அழகி போட்டியில் வெற்றி பெற்றார். உடனடியாக அவர் பல பிராண்டுகளின் மேம்பாட்டுக்காக மாடலிங் செய்தார் . 'மிஸ் ப்ளாசம் 1998' மற்றும் ' மிஸ் எசோடிகா 1999' என்ற இரு அழகிப்போட்டியில் மாநில அளவில் வென்றார் பின்னர் 'மிஸ் மில்லினியம் - 2000' பட்டத்தை வென்று , கன்னட திரைப்பட உலகில் காலடி எடுத்து வைத்தார்.[1]

திரை உலக பிரவேசம்தொகு

கன்னட படவுலகம் அவ்வளவாக இவருக்கு கை கொடுக்கவில்லை .அதிக பட்சமாக கதாநாயகன் தங்கை வேடமே கிடைத்தது . ஹார்ட் பீட்ஸ், கிரீன் சிக்னல் ,ஹாட்ஸ் ஆப் இந்தியா ,தவறினா சிறி ,ரோடு ரோமியோ ,ஆகாஷ் ,தேவரு கோட்ட தங்கி ஆகிய சிவராஜ்குமார், புனித் ராஜகுமார்படங்களில் நடித்தார்.

சொந்த வாழ்க்கைதொகு

தொழில்முறை வாழ்க்கையில் சின்னத்திரையிலும் தோன்றினார் ஒரு பெரிய இடைவெளிக்கு பின் திருமணம் செய்து திரைவாழ்வை விட்டு விலக முடிவு செய்தார் . அசிதா அக்டோபர் 21 ம் தேதி தொழிலதிபர் ஷங்கரை திருமணம் புரிந்தார் . அசிதாவும் ,சங்கரும் சுமார் எட்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர் .இந்த திருமணம் இந்து -கிறிஸ்துவ கலப்பு மணம் ஆகும் .எனவே இவர்கள் திருமணம் இரு மத மரபுகளின் படியும் நடைபெற்றது .

மேற்கோள்கள்தொகு

  1. "Ashita". Biography. https://www.filmibeat.com.+பார்த்த நாள் 5 அக்டோபர் 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசிதா_(_நடிகை_)&oldid=2424730" இருந்து மீள்விக்கப்பட்டது