அசுன்னா பண்பாடு
அசுன்னா பண்பாடு (Hassuna culture) தற்கால ஈராக் நாட்டின் வடக்கு மெசபடோமியா பகுதியில், புதிய கற்காலத்தைச் சேர்ந்ததாகும். கிமு 6,000 காலத்திய அசுன்னா பண்பாட்டு மக்கள் பயன்படுத்திய மட்பாண்டங்கள், கைக்கோடாரிகள், அரிவாள்கள், தானியங்களை அரைக்கும் கற்கள், சமையல் அடுப்புகள், சுடு களிமண் மற்றும் கல் தொட்டிகள், வேளாண்மை பயன்படுத்தப்பட்ட வீட்டு வளர்ப்பு விலங்குகளின் எலும்புகள் போன்ற தொல்பொருட்கள் வடக்கு மெசபடோமியாவில் அசுன்னா தொல்லியல் மேடு மற்றும் செம்சரா தொல்லியல் மேடுகளை அகழ்வாய்வு செய்யும் போது கிடைத்துள்ளது.
அசுன்னா பண்பாடு Hassuna culture | |
---|---|
[[File:![]() | |
புவியியல் பகுதி | மெசபடோமியா |
காலப்பகுதி | புதிய கற்காலம் |
காலம் | கிமு 6,000 |
Type site | தொல்லியல் மேடு |
முக்கிய களங்கள் | அசுன்னா தொல்லியல் மேடு செம்சரா தொல்லியல் மேடு |
முந்தியது | மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (ஆ), யார்முகியான் பண்பாடு, ஹலாப் பண்பாடு |
பிந்தியது | உபைது பண்பாடு |
விளக்கம் தொகு
கிமு 6,000-இல் அசுன்னா பண்பாட்டு காலத்தில் மக்கள், வடக்கு மெசபடோமியாவின் சக்ரோசு மலைகளின் அடிவாரங்களில் சிறு சிறு நிலப்பரப்புகளில் வேளாண்மை செய்து வாழ்ந்தனர். பெண் தெய்வங்களை வழிபட்டமைக்கு, பல பெண் உருவச் சிற்பங்கள் கிடைத்துள்ளது. இறந்தவர்களின் உடலை தாழிகளில் வைத்து அடக்கம் செய்தனர்.[1]
அசுன்னா பண்பாடுக் களத்தின் தொல் பொருட்கள் தொகு
-
தட்டு, கிமு 5,500
-
வண்ணம் பூசப்பட்ட மட்பாண்டத்தின் உடைந்த பகுதி, கிமு 6500 - 6000
-
-
-
சீரமைக்கப்பட்ட வீடு
-
சீரமைக்கப்பட்ட வீடு