அசோகமித்திரன் (செப்டம்பர் 22, 1931-மார்ச்சு 23,2017) தமிழின் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர். தியாகராஜன் என்ற இயற்பெயர் கொண்ட அசோகமித்திரன் 1931 ஆம் ஆண்டு ஆந்திர பிரதேசத்தில் உள்ள செகந்திராபாத் நகரத்தில் பிறந்தவர். தந்தையின் மறைவிற்கு பிறகு தனது 21ஆம் வயதில் சென்னைக்கு குடியேறினார் [1] . எளிமையும், மெல்லிய நகைச்சுவையும் கொண்டது இவருடைய எழுத்து. தமிழ் இலக்கியத்துக்கு உலக அளவில் அங்கீகாரம் பெற்றுத் தந்தவை இவரது கதைகள். [2] அமெரிக்க இலக்கியங்களைத் தமிழில் அறிமுகம் செய்த தனிப்பெருமை இவருக்குரியது. இவரது நாவல்கள் ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆங்கில நாளிதழ்களில் தொடர்ந்து எழுதிவந்த அசோகமித்திரன், ஐக்கிய அமெரிக்காவில் அயோவா பல்கலைக்கழகத்தில் எழுத்தாளர்களுக்கான சிறப்புப் பயிலரங்கில் கலந்து கொண்டவர்.[3]

அசோகமித்திரன்
Asokamitran.jpg
பிறப்பு தியாகராஜன்
செப்டம்பர் 22, 1931(1931-09-22)
சிக்கந்தராபாத், ஆந்திரப் பிரதேசம்
இறப்பு 23 மார்ச்சு 2017(2017-03-23) (அகவை 85)
சென்னை, தமிழ்நாடு
தேசியம் இந்தியர்
பணி எழுத்தாளர்
விருதுகள் சாகித்திய அகாதமி விருது

1996 இல் அப்பாவின் சிநேகிதர் சிறுகதை தொகுப்புக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றவர். இவரது படைப்புகள் பெரும்பாலும் சென்னை அல்லது ஹைதராபாத்தை கதைக்களமாக கொண்டு அமைந்திருக்கும். சாதாரணமான கதாபாத்திரங்களின் மூலம் அசாதாரண கருத்துக்களை வெளிப்படுத்துவதாக இவரது படைப்புகள் அமைந்திருக்கும் என்று ஒரு கருத்து உண்டு.இவர் 2017 மார்ச்சு 23 அன்று சென்னை வேளச்சேரியில் உள்ள தன் மகன் வீட்டில் 86 ஆம் அகவையில் இறந்தார்.[4]

பொருளடக்கம்

ஆக்கங்கள்தொகு

சிறுகதைகள்தொகு

  1. நாடகத்தின் முடிவு
  2. வாழ்விலே ஒருமுறை
  3. விமோசனம் விடுதலை
  4. காலமும் ஐந்து குழந்தைகளும் [5]
  5. முறைப்பெண்
  6. சினேகிதர்
  7. பிப்லப் சௌதுரியின் கடன்

நாவல்கள்தொகு

  1. பதினெட்டாவது அட்சக்கோடு[6]
  2. தண்ணீர்
  3. இன்று
  4. ஆகாசத்தாமரை
  5. ஒற்றன்
  6. மானசரோவர்[7]
  7. கரைந்த நிழல்கள்

குறுநாவல்கள்தொகு

  1. இருவர்
  2. விடுதலை
  3. தீபம்
  4. விழா மாலைப் போதில்

பிறதொகு

அசோகமித்திரன் கதைகள் தொகுப்பு 1&2

கட்டுரைகள்தொகு

அசோகமித்திரன் கட்டுரைகள் தொகுப்பு 1&2

தகைமைகளும் விருதுகளும்தொகு

இவருக்குப் பல தகைமைகளும் விருதுகளும் கிடைத்துள்ளன. அவற்றில் சில:-

  • இவருக்குத் தமிழ்நாடு அரசு பரிசுகள் மும்முறையும் இலக்கியச் சிந்தனை விருதுகள் 1977 இலும் 1984 இலும் இருமுறையும் கிடைத்தன.
  • இவருக்கு இந்திய இலக்கியத்தை ஒப்பீடு செய்யும் ஆய்வுக்கு கே.கே. பிர்லா நல்கை கிடைத்தது. மேலும் 1973-74 இல் அயோவா பல்கலைக்கழகத்தின் படைப்பிலக்கிய நல்கையும் கிடைத்தது.
  • லில்லி நினைவுப் பரிசு, 1992
  • இவருக்கு 1993 இல் இராமகிருஷ்ணா ஜெய்தயாள் அமைதி விருது டால்மியா அறக்கட்டளையால் தரப்பட்டது.[8]
  • அக்ட்சரா விருது, 1996.
  • இவரது அப்பாவின் சிநேகிதர் எனும் சிறுகதை தொகுப்புக்கு 1996 இல் சாகித்திய அகாதெமி விருது கிடைத்தது.[9]
  • 2007 ஜனவரியில் எம்.ஜி.ஆர் விருது
  • இவர் 2012 மே மாதத்தில் என்.டி.ஆர். தேசிய இலக்கிய விருதை என்.டி.ஆர். அறிவியல் அறக்கட்டளையில் இருந்து பெற்றார்.[10]
  • 2013 பிப்ரவரி 10 இல் சென்னையில் நடந்த விழாவொன்றில் தொடக்கநிலை க.நா.சு. விருது
  • 2013 மார்ச்சு 30 இல் கொல்கத்தாவில் உள்ள பாரதீய பாஷா அறக்கட்டளையின் விருது

ஆங்கிலம்தொகு

  1. ஃபோர்டீன் இயர்ஸ் வித் பாஸ்
  2. தி கோஸ்ட் ஆஃப் மீனம்பாக்கம்
  3. ஸ்டில் ப்ளீடிங் ஃபிரம் தி வூண்ட்

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அசோகமித்திரன்&oldid=2212608" இருந்து மீள்விக்கப்பட்டது