அச்சுதன் கூடலூர்

கேரள ஓவியர்

அச்சுதன் கூடலூர் ( Achuthan Kudallur, 1945-2022) என்பவர் ஒரு கேரள ஓவியர் ஆவார். இவருக்கு கேரள லலிதா கலா அகாடமி பெல்லோஷிப் வழங்கப்பட்டது (2017).[1] இவர் நவீன அரூப ஓவியங்களை வரைவதில் தனக்கென சிறப்பான அடையாளத்தைக் கொண்டிருப்பவர்.

வாழ்க்கை குறிப்பு தொகு

இவர் 1945 ஆம் ஆண்டு கேரளத்தின், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள கூடலூரில் மறைந்த மத் தெக்கேபட் எம்டி பரமேசுவரன் நாயர் மற்றும் கூடலூரைச் சேர்ந்த பருக்குட்டி அம்மா ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். எம். டி. வாசுதேவன் நாயர் இவரது தாய் மாமன் ஆவார்.[2] மளமல்காவு அரசு. எல்பி பள்ளி. திரிதாலா உயர்நிலைப் பள்ளியில் படித்துவிட்டு, திருச்சூர் மகாராஜா பல தொழில்நுட்பக் கல்லூரியில் சேர்ந்தார். சென்னையில் உள்ள மதராஸ் ஆர்ட் கிளப்பின் கீழ் உள்ள நுண்கலை கல்லூரியில் சேர்ந்தார். துவக்கக் காலத்தில் சிறுகதைகள் எழுதினார். எம். கோவிந்தனின் சமிக்ஷா இதழில் இவரது ‘சிரமுலா வர சரிமவரா’ என்ற கதை வெளியனது. அச்சுதன் கூடலூர் கூடலூர் நில அளவைப் பிரிவில் வரைவாளராக அரசு பணியில் இருந்தார். ஒரு கட்டத்தில் அரசு பணியில் இருந்து விலகி முழுநேர ஓவியராக ஆனார். 1977ல் சென்னை மாக்ஸ்முல்லர் பவன் கண்காட்சியில் அச்சுதன் கூடலூர் உலக கவனத்திற்கு வந்தார். திருமணம் செய்துகொள்ளாமல் தனியாக வாழ்ந்துவந்த இவர். 2022 சூலை 18 அன்று சென்னையில் காலமானார்.

விருதுகள் தொகு

  • 1988 இல் மத்திய நுண்கலை அகாதமி விருது
  • 1982ல் தமிழ்நாடு லலித் கலா அகாதமி விருது
  • 2017 - கேரளா லலிதா கலா அகாடமி பெல்லோஷிப்

குறிப்புகள் தொகு

  1. "Akademi Fellowships". www.lalithkala.org. www.lalithkala.org/content/akademi-fellowships. பார்க்கப்பட்ட நாள் Feb 14, 2018.
  2. "அஞ்சலி: அச்சுதன் கூடலூர்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-07-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அச்சுதன்_கூடலூர்&oldid=3507295" இலிருந்து மீள்விக்கப்பட்டது