அச்சுப்பொறி வகைகள்
அச்சுப்பொறிகள் தொகு
செய்தியை வெளியீடு செய்யப் பயன்படுபவைகளில் முதலிடம் வகிப்பது அச்சுபொறிகளாகும். அச்சுபொறிகள் பல வகைப்படும். அவை வரி அச்சுப்பொறிகள், புள்ளி அச்சுப் பொறிகள், மைகொட்டும் அச்சுப்பொறிகள், லேசர் அச்சுப்பொறிகள் ஆகும்.
வரி அச்சுப்பொறிகள் தொகு
ஒரு நிமிடத்திற்கு 3000 வரிகள் வரை அச்சிடக்கூடிய வரி அச்சு பொறிகள் உள்ளன. ஆனால் இவைகளால் படங்களை அச்சிட முடியாது.
புள்ளி அச்சுப்பொறிகள் தொகு
புள்ளி அச்சுப்பொறிகள் ஒவ்வொரு எழுத்தாக அச்சிடுக்கின்றன. ஒரு நொடியில் 150 முதல் 400 எழுத்துகள் வரை அச்சிடும் திறன் உடையவை.
மை அச்சுப்பொறிகள் தொகு
இப்போது மை அச்சுபோறிகள் அதிகமாக பயன்படுத்துகின்றனர். அச்சிடும் முனையில் ஊசிகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக பல மிகச் சிறிய துளைகளை ஏற்படுத்தி மையினை பாய்ச்சி அச்சிடப்படுகிறது.
லேசர் அச்சுப்பொறிகள் தொகு
லேசர் அச்சுப்பொறிகள் லேசர் ஒளிக்கற்றைகளைப் பயன்படுத்தி அச்சிடுகின்றன. அச்சிடும்போது அச்சுப்பொறியின் எந்த பகுதியும் காகிதத்தினைத் தொடுவது இல்லை.
உசாத்துணை தொகு
கணிப்பொறி அறிவியல், ராம் குமார், சைவ சிந்தாத்த நூற் பதிப்பு கழகம், சென்னை.