அச்சோ அணை
சப்பானிலுள்ள ஓர் அணை
அச்சோ அணை (Haccho Dam) சப்பான் நாட்டின் சாகா மாகாணத்தில் அமைந்துள்ளது. பாறைகள் நிரப்பி கட்டப்படும் வகை அணையாக 24.6 மீட்டர் உயரமும் 346.6 மீட்டர் நீளமும் கொண்டதாக அச்சோ அணை கட்டப்பட்டுள்ளது. முக்கியமாக வேளாண்மை பயன்பாட்டுக்காக இந்த அணை பயன்படுத்தப்படுகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி 1.3 சதுர கிலோ மீட்டர்களாகும். அணை நிரம்பியிருக்கும் போது இதன் பரப்பளவு சுமார் ஆறு {6} எக்டேர்களாகும். 347 ஆயிரம் கன மீட்டர் தண்ணீரை இங்கு சேமிக்க முடியும். அணையின் கட்டுமானம் 1973 ஆம் ஆண்டு தொடங்கி 1982 ஆம் ஆண்டு முடிக்கப்பட்டது.[1]
அச்சோ அணை Haccho Dam | |
---|---|
அச்சோ அணை நீர்த்தேக்கம் | |
அமைவிடம் | சாகா மாகணம், சப்பான் |
புவியியல் ஆள்கூற்று | 33°18′47″N 130°8′56″E / 33.31306°N 130.14889°E |
கட்டத் தொடங்கியது | 1973 |
திறந்தது | 1982 |
அணையும் வழிகாலும் | |
உயரம் | 24.6 மீட்டர் |
நீளம் | 346.6 மீட்டர் |
நீர்த்தேக்கம் | |
மொத்தம் கொள் அளவு | 347 ஆயிரம் கன மீட்டர்கள் |
நீர்ப்பிடிப்பு பகுதி | 1.3 சதுர கிலோமீட்ட்டர் |
மேற்பரப்பு பகுதி | 6 எக்டேர் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Haccho Dam - Dams in Japan". பார்க்கப்பட்ட நாள் 2022-02-22.