அஜய் ஞானமுத்து
ஆர். அஜய் ஞானமுத்து ஒரு இந்திய திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் முதன்மையாக தமிழ் சினிமாவில் பணிபுரிகிறார். 7ஆம் அறிவு மற்றும் துப்பாக்கி ஆகிய படங்களின் இயக்குனரான ஏஆர் முருகதாஸுக்கு உதவியாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 2015-ல், டிமான்ட்டி காலனி என்ற ஹாரர்-த்ரில்லர் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார், இந்தத்திரைப்படம் விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற சூப்பர் ஹிட் படமாகும். அவரது இரண்டாவது படமான இமைக்கா நொடிகள் [2] பிளாக்பஸ்டர் ஆனது.[3] தற்போது இவர் தேசிய விருது பெற்ற நடிகரான விக்ரம் நடிப்பில் கோப்ரா என்னும் பிரமாண்ட திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
அஜய் ஞானமுத்து | |
---|---|
அஜய் ஞானமுத்து | |
பிறப்பு | அஜய் ஞானமுத்து 15 செப்டம்பர் 1988[1] திருச்சிராப்பள்ளி, தமிழ் நாடு, இந்தியா |
அறியப்படுவது | திரைப்பட இயக்குநர், எழுத்தாளர் |
வலைத்தளம் | |
https://twitter.com/AjayGnanamuthu |
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுஅஜய் தனது பள்ளிப் படிப்பை செயின்ட் ஜான்ஸ் உயர்நிலைப் பள்ளியிலும், செயின்ட் பேட்ரிக் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியிலும் முடித்தார், பின்னர் லயோலா கல்லூரியில் சேர்ந்தார்.[4] காட்சி தொடர்பியல் துறை மாணவராக இருந்த கல்லூரி நாட்களில், குறும்படங்கள் தயாரிப்பதில் ஆர்வம் காட்டினார்.[5] சென்னையில் உள்ள SAE இன்ஸ்டிடியூட்டில் டிஜிட்டல் ஃபிலிம்மேக்கிங் டிப்ளமோவையும் ஒரே நேரத்தில் முடித்தார்.
தொழில்
தொகுஅஜய் 2010-ல் நாளைய இயக்குநர் சீசன்-1 என்ற குறும்பட தயாரிப்பு நிகழ்ச்சியில் போட்டியிட தேர்ந்தெடுக்கப்பட்டார், அங்கு அவர் இறுதிப் போட்டியாளர்களில் ஒருவராக வந்தார். பின்னர் அவர் திரைப்படத் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்து,[6] 7ஆம் அறிவு (2011) மற்றும் துப்பாக்கி (2012) போன்ற படங்களில் பணியாற்றினார்.[7]
திரைப்படவியல்
தொகுஆண்டு | திரைப்படம் | இயக்குநர் | எழுத்தாளர் | குறிப்பு |
---|---|---|---|---|
2015 | டெமோண்டே காலனி | ஆம் | ஆம் | |
2018 | இமைக்கா நொடிகள் | ஆம் | ஆம் | |
2022 | கோப்ரா | ஆம் | ஆம் | தயாரிப்பில் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "R-Ajay-Gnanamuthu". Archived from the original on 2021-10-19. பார்க்கப்பட்ட நாள் 2022-05-18.
- ↑ "ரஹ்மானின் மாயஜால பின்னணியிசைக்காகக் காத்திருக்கிறேன் - இயக்குநர் அஜய் ஞானமுத்து", Hindu Tamil Thisai, 2022-07-12, பார்க்கப்பட்ட நாள் 2024-05-12
- ↑ "Young super hit director says no to 'Thalapathy 65' - Tamil News". 18 March 2020.
- ↑ "Demonte Colony is a gripping tale of horror". Rediff. பார்க்கப்பட்ட நாள் 24 May 2015.
- ↑ "Unadulterated Horror will surely spook you out". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 22 May 2015.
- ↑ "Arulnithi in horror film 'Demonte Colony'". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 4 November 2014.
- ↑ "'Demonte Colony': Strong foundation with brilliant technical execution". Deccan Chronicle. 23 May 2015. பார்க்கப்பட்ட நாள் 23 May 2015.