அஜய் மிஸ்ரா தெனி

இந்திய அரசியல்வாதி

அஜய் மிஸ்ரா தெனி (Ajay Mishra Teni) (பிறப்பு:25 செப்டம்பர் 1960) பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதியும், 17வது மக்களவை உறுப்பினரும் ஆவார்.[1][2] தற்போது இவர் உள்துறை அமைச்சகத்தில் இணை அமைச்சராக உள்ளார். இவர் உத்தரப் பிரதேச மாநிலத்தின் கேரி மக்களவை தொகுதியிலிருந்து பாரதிய ஜனதா கட்சி சார்பாக இந்திய நாடாளுமன்றத்தின் மக்கள்வைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4][5]

அஜய் மிஸ்ரா தெனி, உள்துறை இணை அமைச்சர்

இவர் தற்போது உள்துறை இணை அமைச்சராக உள்ளார்.

இளமை வாழ்க்கை தொகு

அஜய் மிஸ்ரா உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் உள்ள பன்வீர் பூர் எனும் கிராமத்தில் 25 செப்டம்பர் 1960 அன்று பிறந்தவர்.[6] இவர் சத்திரபதி சாகுஜி மகராஜ் பல்கலைக்கழகத்தில் இளநிலை அறிவியல் பட்டப்படிப்பை முடித்து, பின்னர் இளநிலை சட்டப் படிப்பை படித்தவர்.[2]

அரசியல் வாழ்க்கை தொகு

அஜய் மிஸ்ரா 2012-ஆம் ஆண்டில் நிகாசன் சட்டமன்றத் தொகுதிலிருந்து உத்தரப் பிரதேச சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டார்.[2][5] 2014-ஆம் ஆண்டில் இவர் கேரி மக்களவை தொகுதியிலிருந்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக, இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

செப்டம்பர் 2014-இல் அஜய் மிஸ்ரா தெனி, ஊரக வளர்ச்சி தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 8 சூலை 2021 அன்று இவர் உள்துறை அமைச்சகத்தில் இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[7]

லக்கிம்பூர் கேரி வன்முறை தொகு

3 அக்டோபர் 2021 அன்று காரை வேகமாக ஓட்டி வ்ந்த அஜய் மிஸ்ரா தெனியின் மகன், லக்கிம்பூர் கேரியில் இந்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை நீக்கப் போராடிய இந்திய விவசாய போராட்டக்காரர்கள் மீது பாய்ந்ததால் சம்பவ இடத்தில் இருவர் உயிரிழந்தனர். இதையடுத்து விவசாயிகளுக்கும், பாரதிய ஜனதா கட்சியினருக்கும் இடையே ஏற்பட்ட வன்முறையில், மேலும் 2 விவசாயிகள், பத்திரிகையாளர் என 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரத்தை தாமாக கையில் எடுத்து விசார்த்தது இந்திய உச்சநீதிமன்றம். விசாரணையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் உள்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, சிலரை கைது செய்தனர். இந்த விவகாரத்தில் நடைபெறும் விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற நீதிபதி ராஜேஷ்குமார் ஜெயின் என்பவரை உச்சநீதிமன்றம் நியமித்தது. உத்தரபிரதேச மாநிலம், லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் மீது கார் ஏற்றி கொல்லப்பட்ட வன்முறை சம்பவம் திட்டமிட்ட சதி என உச்சநீதிமன்ற புலனாய்வு குழு தகவல் தெரிவித்து உள்ளது.[8] இதனால் எதிர்கட்சிகள் அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவியிலிருந்து நீக்க நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி வருகின்றன்ர்.[9]

மேற்கோளகள் தொகு

  1. Misra, Shri Ajay (Teni) , MEMBER OF XVI LOK SABHA
  2. 2.0 2.1 2.2 "Candidate affidavit". My neta.info. http://myneta.info/up2012/candidate.php?candidate_id=2003. 
  3. "2012 Election Results". இந்தியத் தேர்தல் ஆணையம் website. http://eci.nic.in/eci_main/StatisticalReports/AE2012/Stats_Report_UP2012.pdf. 
  4. "All MLAs from constituency". elections.in. http://www.elections.in/uttar-pradesh/assembly-constituencies/nighasan.html. 
  5. 5.0 5.1 "Member Lok Sabha Profile". மக்களவை (இந்தியா) website இம் மூலத்தில் இருந்து 15 ஜனவரி 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20150115092828/http://164.100.47.132/LssNew/Members/briefbioprofiles.aspx?mpsno=4696. 
  6. "Who Was Ajay Mishra Before He Became a Legislator?". The Wire. 18 October 2021. https://thewire.in/politics/ajay-mishra-2000-murder-case-lakhimpur-kheri. 
  7. "Modi cabinet rejig: Full list of new ministers". India Today. பார்க்கப்பட்ட நாள் 2021-07-11.
  8. Lakhimpur Kheri violence was as per 'pre-planned conspiracy': SIT report
  9. "Video: Minister Ajay Mishra Lunges At Reporter For Referencing Jailed Son". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2021-12-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஜய்_மிஸ்ரா_தெனி&oldid=3792280" இலிருந்து மீள்விக்கப்பட்டது