அஞ்சலை அம்மாள்

அஞ்சலை அ

அஞ்சலை அம்மாள் (Anjalai Ammal, 1890 - சனவரி 20, 1961) இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகி ஆவார்.

அஞ்சலையம்மாள்

வாழ்க்கைக் குறிப்புதொகு

அஞ்சலை அம்மாள் 1890 ஆம் ஆண்டில் கடலூரில், முதுநகர் என்ற நகரில் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்தார். இவர் ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். கணவர் முருகப்பா ஒரு பத்திரிகையில் முகவராக இருந்தார். மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்து அஞ்சலை அம்மாள் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். 1921 இல் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்ற தென்னிந்தியாவின் முதல் பெண்மணி என்ற சிறப்பு இவருக்கு உண்டு. தனது குடும்ப சொத்தாக இருந்த நிலங்களையும் வீட்டையும் விற்று இந்தியாவின் விடுதலைப் போராட்டத்திற்காக பணத்தை செலவிட்டார். 1927 ஆம் ஆண்டு நடைபெற்ற நீலன் சிலை அகற்றும் போராட்டத்தில் அஞ்சலை பங்கேற்றார். தனது ஒன்பது வயது மகள் அம்மாக்கண்ணுவையும் இப்போராட்டத்தில் ஈடுபடுத்தி அக்குழந்தையுடன் சிறைக்குச் சென்றார். தனது ஒன்பது வயதுக் குழந்தையை சிறையிலேயே வளர்த்தார்.[1] சிறையில் இருந்த அம்மாக்கண்ணு, அஞ்சலையம்மாள் இருவரையும் காந்தியடிகள் அடிக்கடி பார்வையிட்டார். அம்மாக்கண்ணு என்ற பெயரை லீலாவதி என்று மறுபெயரிட்டு தன்னுடன் வார்தா ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றார். 1930 ஆம் ஆண்டு நடைபெற்ற உப்புச் சத்தியாகிரகத்தின் போது அஞ்சலை அம்மாள் கடுமையாகக் காயமடைந்தார்.

1931 ஆம் ஆண்டு நடைபெற்ற அனைத்திந்திய மகளிர் காங்கிரசு கூட்டத்திற்கு அஞ்சலை தலைமை தாங்கினார். 1932 ஆம் ஆண்டு மற்றொரு போராட்டத்தில் கலந்துகொண்டார் என்பதற்காக இவர் வேலூர் சிறைக்கு அனுப்பப்பட்டார்.

அந்தநேரத்தில் இவர் கர்ப்பமாக இருந்தார் என்பதனால் பிணையில் விடுவிக்கப்பட்டார். மகன் பிறந்த இரண்டு வாரங்களுக்குள் அஞ்சலை மீண்டும் வேலூர் சிறைக்கு அனுப்பப்பட்டார்.[2] ஒருமுறை காந்தி கடலூருக்கு வந்தபோது அஞ்சலை அம்மாளை சந்திக்க முயன்றார். பிரித்தானிய அரசாங்கம் காந்தியடிகள் அஞ்சலை அம்மாளைப் பார்க்க தடை விதித்தது. ஆனால் அஞ்சலை அம்மாள் பர்தா அணிந்து ஒரு குதிரை வண்டியில் வந்து காந்தியடிகளை சந்தித்தார். அஞ்சலையின் துணிவைக் காரணமாகக் காட்டி காந்தியடிகள் இவரை தென்னிந்தியாவின் சான்சி ராணி என்று அழைத்தார்.

1947 இல் இந்தியா விடுதலை அடைந்த பின்னர், அஞ்சலையம்மாள் மூன்று முறை தமிழகத்தின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

1961 ஆம் ஆண்டு சனவரி மாதம் 20 ஆம் நாள் அஞ்சலை அம்மாள் காலமானார்.

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அஞ்சலை_அம்மாள்&oldid=2774277" இருந்து மீள்விக்கப்பட்டது