அஞ்சல் தலைகளில் பறவைகள்

அஞ்சல் தலைகளில் பறவைகள் (Bird stamp) என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பறவைகளைப் படத்துடன் கூடிய அஞ்சல் தலை ஆகும். விடயம்சார் தபால்தலை சேகரிப்பில் இது முக்கியமான கருப்பொருள் ஆகும்.

விமான அஞ்சல் முத்திரைகளுக்கான பொதுவான படமாக பறவைள்[1]
1875ஆம் ஆண்டு சப்பானின் அஞ்சல் தலை

1875ஆம் ஆண்டளவில் அஞ்சல் தலைகளில் பறவைகள் தோன்றத் தொடங்கின. சப்பான் மூன்று வகையான வெள்ளை வாலாட்டிக் குருவி, பெரிய வல்லூறு மற்றும் பீன் வாத்து ஆகியவற்றின் பகட்டான விளக்கப்படங்களைக் கொண்ட மூன்று முத்திரைகள் தொடராக வெளியானது.[2][3] 1869ஆம் ஆண்டு இசுகாட்#116 மற்றும் #121-ல், பொதுவான அஞ்சல் பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்ட தபால் தலைகளில், இறக்கைகள் விரிந்திருக்கும் கழுகைச் சித்தரிக்கும் அமெரிக்காவின் முதல் பறவை முத்திரை வெளியிடப்பட்டது. 1963-ல் "இயற்கை வாரத்தை" கௌரவிக்கும் வகையில் ஐக்கிய ராச்சியம் தனது பதிப்பை வெளியிட்டது.[2] 2003ஆம் ஆண்டு வரை, உலகம் முழுவதும் 10,000 பறவை முத்திரைகள் வெளியிடப்பட்டுள்ளன.[4]

முக்கிய தபால் தலைச் சேகரிப்பாளர்களுள் கிறிஸ் கிபின்சு ஆவார். இவருடைய பன்னிரண்டாயிரம் தபால் தலைகளில் சுமார் மூவாயிரம் பறவைச் சிற்றினங்கள் சித்தரிக்கப்பட்டதைத் தெரிவிக்கின்றார்.[5] இந்தப் பறவைகள் தபால் தலைகளில் பறவையியல் நிறுவனங்களான அமெரிக்க மிதவெப்பமண்ட சங்கம் மற்றும் பறவைகள் அஞ்சல் தலை சமூக அஞ்சல் தலைகளும் அடங்கும்.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. Esten, Sidney (1941), Birds on Stamps, vol. 35, p. 20
  2. 2.0 2.1 Malcolm Ogilvie, "Birds on Stamps" பரணிடப்பட்டது 2015-11-18 at the வந்தவழி இயந்திரம், Birds of Britain: The Monthly Web Magazine for Birdwatchers, March 2002.
  3. "1875 Bird definitive stamps of Japan". colnect.com. பார்க்கப்பட்ட நாள் 2015-11-18.
  4. Stanley Gibbons catalog listing for Collect Birds on Stamps 5th Edition பரணிடப்பட்டது செப்டெம்பர் 27, 2007 at the வந்தவழி இயந்திரம்
  5. Koeppel 2006, ப. 14.
  6. "The Bird Stamp Society brings bird stamp collectors together". The Bird Stamp Society. 2015. பார்க்கப்பட்ட நாள் 2015-11-17.
ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஞ்சல்_தலைகளில்_பறவைகள்&oldid=4109669" இலிருந்து மீள்விக்கப்பட்டது