அஞ்சியத்தை மகள் நாகையார்

சங்க காலத் தமிழ்ப் புலவர்

அஞ்சியத்தை மகள் நாகையார் ஒரு சங்க காலத் தமிழ்ப் புலவர் ஆவார்.

பெயர்க் காரணம் தொகு

  • இப்பெண் புலவர் அஞ்சி என்பானின் அத்தைமகள் ஆகையால் இவ்வாறு அழைக்கப்படுகிறார். இந்த அஞ்சி அதியமான் நெடுமான் அஞ்சி இவர் தன் அத்தை மகன் அஞ்சியின் புகழைப் பாடும் நூலில் இருந்த பாடல்களைப் பாணன் ஒருவன் புதிய பண் அமைத்துப் பாடியபோது கேட்டு மகிழ்ந்த செய்தியைக் குறிப்பிடுகிறார். [1]
  • நாகு என்னும் சொல் இளமையைக் குறிக்கும். இந்த வகையில் இவர் பெயர் அமைந்திருக்கலாம். அல்லது இப்புலவர் நாகப்பட்டினத்தில் வாழ்ந்தவராக இருக்கலாம்.

பாடல்கள் தொகு

சங்க இலக்கியங்களில் இவரது பெயரில் ஒரே ஒரு பாடல் காணப்படுகிறது. [2]

பாடலின் உரை தொகு

கடுவன் என்னும் ஆண் குரங்கு பலாப்பழத்தைத் தழுவிக்கொண்டு தன் மந்தியை அழைத்ததாம். அது விறலி ஆடும்போது முழவன் முழவை முழக்குவது போல் இருந்ததாம். தலைவன் அப்படிப்பட்ட நாட்டை உடையவனாம். திருமண முரசு இதனால் உள்ளுறையாக உணர்த்தப்படுகிறது. (அதியமான் நெடுமான்) அஞ்சி இசைநூல் ஒன்றை உருவாக்கியிருந்தான். அந்த நூலை இந்தப் பாடல் 'நல்லிசை நிறுத்த நயவரு பாடல் தொல்லிசை' என்று குறிப்பிடுகிறது. பாண்மகன் இந்தப் பண்ணிசையைப் பாடக் கேட்பதைக் காட்டிலும் திருமண முரசோடு கூடிய தலைவன் இனியவன் என்கிறாள் தலைவி. [3]

மேற்கோள் தொகு

  1. கடும் பரிப் புரவி நெடுந் தேர் அஞ்சி,
    நல் இசை நிறுத்த நயம் வரு பனுவல்,
    தொல் இசை நிறீஇய உரை சால் பாண்மகன்
    எண்ணு முறை நிறுத்த பண்ணினுள்ளும், 15
    புதுவது புனைந்த திறத்தினும்,
    வதுவை நாளினும், இனியனால் எமக்கே. (அகநானூறு 352)
  2. (அகம்: 352 குறிஞ்சி)
  3. பாடலும் விளக்கமும்