அஞ்ஞாடி (புதினம்)

அஞ்ஞாடி எழுத்தாளர் பூமணியால் எழுதப்பட்ட மிகப்பெரிய புதினம் ஆகும். மழைக்கஞ்சியாக கதைகளைக் கரைத்து ஊட்டிய அம்மாவுக்கு என இப்புத்தகத்தை தனது தாய்க்குச் சமர்ப்பணம் செய்திருக்கிறார். க்ரியா பதிப்பகம் இந்நூலை வெளியிட்டிருக்கிறது. இப்புத்தகத்தின் பதிப்புரிமை பூமணிக்கு உரியது. இந்நாவல் 2014ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது பெற்றது.[1]

அஞ்ஞாடி
நூலாசிரியர்பூமணி
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
வகைபுதினம்
வெளியீட்டாளர்க்ரியா பதிப்பகம்
வெளியிடப்பட்ட நாள்
2012
பக்கங்கள்1200
விருதுசாகித்திய அகாதமி விருது (2014)
ISBN978-81-921302-1-7

நாவலைப் பற்றி தொகு

  • இந்நாவலின் ஆய்விற்கு ஐ.எஃப்.ஏ (IFA) நிதியுதவி செய்திருந்தது.
  • தமிழகத்தில் நடந்த சாதிக்கலவரத்தின் வரலாற்றை விவரிக்கிறது.
  • துயரத்திலும் மக்களின் மனித நேயத்தை உணர்த்துகிறது.

பின்னட்டைக் குறிப்புகள் தொகு

இப்புத்தகத்தின் பின்னட்டையில் காணப்படும் குறிப்புகள்:

கடந்தகாலத்தில் நிகழ்ந்ததாகக் கூறிக்கொண்டு வாராவாரம் கிளுகிளுப்புக்காக எழுதப்பட்டு வருஷக்கணக்கில் வந்ததெல்லாம் வெறும் சரித்திரக் கதைகள் தாம். 'அஞ்ஞாடி... தான் உண்மையில் தமிழின் முதல் வரலாற்று நாவல்... பூமணியின் மொழிக்கட்டுப்பாடு: பூமணிக்குள் ஒரு தேர்ந்த எடிட்டரும் தொடர்ந்து வேலை செய்து கொண்டிருப்பதால் 'சொகமாக'- நாவலில் மீண்டும் மீண்டும் வரும் வார்த்தை இது- நாவலை வாசித்துக் கொண்டே போகலாம். இதுதான் மொழிக்கு, பண்பாட்டுக்கு படைப்பாளியின் கொடை. ஒரு படைப்பாளிக்கான சவாலை எதிர்கொண்டு தமிழில் இருந்துவந்த சமீபத்திய இடைவெளியை முழுமையாக நிரப்பி இந்த நாவல் புதிய சவால்களை விமர்சகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் உருவாக்கியிருக்கிறது.

புத்தகத்தில் இருந்து தொகு

"உறியில நெய்யிருந்தா ஒறங்காதாம் பூனக்குட்டி."

"வெள்ளாமைய அடிச்சுக் குலுக்க நெறையாப் போட்டுக்கிட்டுத் தின்னுட்டுத்தின்னுட்டு ஓடையில ஒரு கூடைக்குச் சாணி போடுறதுதான் பெழப்புன்னா பண்ணிக்கும் நமக்கும் வித்தியாசமில்லாமப் போயிரும் ."

"பேறுகாலம் பார்க்கப்போனா புள்ள வந்தாலும் ஏந்தணும் பீ வந்தாலும் ஏந்தணும் ."

"நரி குசுவிக் கடலு கலங்கிப் போகாது."

"காக்காய்க்குப் புடுக்கிருந்தா பறக்கும்போது தெரிஞ்சிட்டுப்போகுது ."

"குனிஞ்சு துரும்பு புடுங்கச் சீவனில்ல. துணிஞ்சு பனையைப் புடுங்குவன்னு பீத்துறயே "

"நார பறக்காற நாப்பத்தெட்டு மடக் கொளமெல்லாம் கோரகூட மொளைக்காம சருகாக் காஞ்சு கெடக்குது ."

"ஆனைக்கு வடிக்கிற வீட்ல பூனைக்குச் சோறில்லாற கதையாப் போச்சு ."

"ஏறச் சொன்னா எருமைக்குக் கோவம் இறங்கச் சொன்னால் நொண்டிக்கு கோவம் ."

"அறுப்புக் காலத்துல எலிக்கு அஞ்சு பொண்டாட்டியாம்."

"அடுக்கிற அரும ஒடைக்கிற நாயிக்குத் தெரியலயே."

"ஆறு போவதே கிழக்கு அரசன் சொல்வதே வழக்கு. "

வட்டார மொழி வழக்குகள் தொகு

  • சடவு
  • ஒலுங்கு
  • தவசம்
  • குலுக்க
  • விடிலி
  • சகடால்
  • கெலித்து விட்டான்.

மேற்கோள்கள் தொகு

  1. 'அஞ்ஞாடி' நாவலுக்காக எழுத்தாளர் பூமணிக்கு சாகித்ய அகாடமி விருது


வெளி இணைப்புகள் தொகு

பூமணி என்ற நல்லாசிரியரும், அஞ்ஞாடி என்ற பாடப்புத்தகமும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அஞ்ஞாடி_(புதினம்)&oldid=1826408" இலிருந்து மீள்விக்கப்பட்டது