அடல் புத்தாக்கத் திட்டம்

அடல் புத்தாக்கத் திட்டம் (ஏஐஎம்) என்பது நாடு முழுவதும் புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவோரை மேம்படுத்துவதற்காக நிதி ஆயோக் 2016 ஆம் ஆண்டு தோற்றுவித்த ஒரு முதன்மை முயற்சியாகும். [1] இதன் நோக்கமானது, பிரச்சினைகளை தீர்வுகாணும் ஒரு முழுமையான அணுகுமுறையை பள்ளிகளில் உருவாக்குவது மற்றும் பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், தனியார் மற்றும் MSME துறையில் தொழில்முனைவோர்க்கான சுற்றுச்சூழலை உருவாக்குவது ஆகும்.[2][3]

கூறுகள்/நிலைகள் தொகு

இந்த திட்டத்தின் நோக்கத்தினை நிறைவேற்றுவதற்க்காக பல்வேறு நிலைகள் பல்வேறு மட்டங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவை:

"1. அடல் பழுதாக்க ஆய்வகம் (ATL-ATAL TINKERING LAB):" இதன் முன்முயற்சியானது வழக்கமான இந்தியக்கல்வி முறையிலிருந்து மாறுபட்டு, ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரையிலுள்ள மாணவர்களை தொழில்நுட்ப கண்டுபிடிப்பு உலகிற்கு அறிமுகப்படுத்தும் முன்னுதாரண மாற்றத்தை உருவாக்குகிறது. ATL ஆனது இந்தியப் பள்ளிகளில் கலாச்சார ரீதியாக வேறுபட்ட நுண்ணிய சூழலை மேம்படுத்துகிறது, இது ஒரு நிலையான பாடத்திட்டம் இன்றி மாணவர்கள் அவர்தம் ஆர்வமுள்ள பகுதியில் வேலை செய்ய அனுமதிக்கிறது. டிங்கரிங் ஆய்வக பணியானது நாடு தழுவிய வெகுஜன இயக்கத்தை தூண்டுகிறது மற்றும் அடிமட்டத்தில் மில்லியன் கணக்கான இளம் உயர்நிலைப் பள்ளி கண்டுபிடிப்பாளர்களை உருவாக்குகிறது. [4][5][6][7]


இன்றுவரை, AIM ATLகளை நிறுவுவதற்காக நாட்டின் 680+ மாவட்டங்களில் 10,000 பள்ளிகளைத் தேர்ந்தெடுத்துள்ளது. இதுவரை 7000க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது மேலும் 2 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்கள் ATLகளுக்கான அணுகலைப் பெற்றுள்ளனர். [8][9][10][11]



"2. அடல் அடைகாக்கும் மையம் (AIC-ATAL INCUBATION CENTRE):" இதன் நோக்கமானது நாடு முழுவதும் அதிநவீன உள்கட்டமைப்புடன் உலகத் தரம் வாய்ந்த அடைகாக்கும் வசதிகளை அமைப்பது, இது ஆய்வகங்களின் அடிப்படையில் துறைசார் நிபுணர்களின் வழிகாட்டுதல் தன்மையுடன் அடுத்த தலைமுறை தொடக்கங்களுக்கு ஆதரவளிக்கும். இது வணிக திட்டமிடல் ஆதரவு தவிர, விதை மூலதனத்திற்கான அணுகல்(seed fund), தொழில் கூட்டாண்மை, பயிற்சி போன்றவற்றை அளிக்கும்.[12]

அடல் புத்தாக்கத் திட்டமானது, இதுவரை 68க்கும் மேற்பட்ட அடல் இன்குபேஷன் மையங்களை பல்கலைக்கழகங்கள் / நிறுவனங்கள் / தனியார் நிறுவனங்களுடன் இணைந்து வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது.[13]



"3. அடல் சமூக புத்தாக்க மையம்(ACIC-ATAL COMMUNITY INNOVATION CENTRE:)" இதன் நோக்கம், உள்கட்டமைப்பு இல்லாத மற்றும் புதுமைக்கான சூழல் எளிதாக கிடைக்காமலிருக்கும் இந்தியாவின் பின்தங்கிய / சேவை செய்யப்படாத பகுதிகளில் (இரண்டாம் நிலை-II நகரங்கள், மூன்றாம் நிலை- III நகரங்கள் மற்றும் முதல் நிலை - I நகரங்களில் பின்தங்கிய/சேவையற்ற பகுதிகள், வடகிழக்கு மாநிலங்கள், சம்மு&காசுமீர், சீர்மிகு நகரங்கள், பின்தங்கிய மாவட்டங்கள், கிராமப்புற மற்றும் பழங்குடியினர் பகுதிகளில்) தொழில் முனைவோர் உணர்வை ஊக்குவிக்குபதாகும். [14]

"4. அடல் புது இந்தியா சவால்(ANIC-ATAL NEWINDIA CHALLENGE):" என்பது அடல் புத்தாக்க பணியின் ஒரு முன்முயற்சியாகும், இது மானிய அடிப்படையில் தேசிய முக்கியத்துவம் மற்றும் சமூகம் சார்ந்த பகுதிகளில் மேம்பட்ட தொழில்நுட்பங்களின் அடிப்படையில் தயாரிப்புகளை உருவாக்கும் புதுமைகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டது.


"5. சிறு குறு தொழில்களுக்கான புத்தாக மற்றும் பயனூறு ஆராய்ச்சி மையம் (ARISE):" சிறுகுறு தொழிற்சாலைகள் (MSME)கள் மற்றும் ஸ்டார்ட்அப்களில் ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் வேலை உருவாக்கம் போன்றவற்றில் சரவதேச நாடுகளின் உதவியுடன் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.[15]

மேலும் பார்க்க தொகு

  • அடல் புத்தாக்க திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மாணவர்கள் தீர்வுகள் - https://www.youtube.com/watch?v=v-3kiYKlDyE

சான்றுகள் தொகு

  1. "Schemes". புதுதில்லி, இந்தியா. 2022-02-17. https://pib.gov.in/newsite/PrintRelease.aspx?relid=136754. பார்த்த நாள்: 2022-02-17. 
  2. "அடல் புத்தாக்க பணி". சென்னை, இந்தியா. 2020-07-20. https://www.hindutamil.in/news/business/575822-atal-innovation-mission-and-scoonews-partner-to-spread-awareness-of-grassroots-innovations.html. பார்த்த நாள்: 2022-02-17. 
  3. "அடல் புத்தாக்க பணி". சென்னை, இந்தியா. 2020-10-13. https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1664058. பார்த்த நாள்: 2022-02-17. 
  4. "Schemes". புதுதில்லி, இந்தியா. 2022-02-05. https://pib.gov.in/Pressreleaseshare.aspx?PRID=1580292. பார்த்த நாள்: 2022-02-17. 
  5. "ISRO adopt 100 ATL". புதுதில்லி, இந்தியா. 2021-01-11. https://www.ndtv.com/education/isro-adopt-100-atal-tinkering-labs-for-promoting-space-education-in-schools. பார்த்த நாள்: 2022-02-17. 
  6. "CSIR adopt ATL". புதுதில்லி, இந்தியா. 2021-04-09. https://www.ndtv.com/education/csir-adopts-295-atal-tinkering-labs-atls-across-india. பார்த்த நாள்: 2022-02-17. 
  7. "AICTE adopt ATL". புதுதில்லி, இந்தியா. 2021-04-14. https://www.ndtv.com/education/aicte-adopt-atal-tinkering-labs-atls-mentor-school-students. பார்த்த நாள்: 2022-02-17. 
  8. "6038 பள்ளிகளில் அடல் ஆய்வகம்". புதுதில்லி, இந்தியா. 2022-02-17. https://aim.gov.in/pdf/ATL_6038List.pdf. பார்த்த நாள்: 2022-02-17. 
  9. "500 தமிழ்நாடு பள்ளிகளில் அடல் ஆய்வகம்". புதுதில்லி, இந்தியா. 2018-09-03. https://www.indiatoday.in/education-today/news/story/atal-tinkering-labs-to-be-set-up-in-500-schools-in-tamil-nadu-education-minister-1330384-2018-09-03. பார்த்த நாள்: 2022-02-17. 
  10. "223 தமிழ்நாடு பள்ளிகளில் அடல் ஆய்வகம்". புதுதில்லி, இந்தியா. 2018-07-16. https://www.thehindu.com/news/cities/chennai/223-more-schools-to-get-tinkering-labs-under-niti-aayog-project/article24204901.ece. பார்த்த நாள்: 2022-02-17. 
  11. "32 தமிழ்நாடு மாவட்டங்களில் அடல் ஆய்வகம்". புதுதில்லி, இந்தியா. 2018-07-16. https://timesofindia.indiatimes.com/city/chennai/all-tn-districts-to-get-atal-tinkering-labs-across-32-tn-districts/articleshow/63447991.cms. பார்த்த நாள்: 2022-02-17. 
  12. "AIM Brouchuer". புதுதில்லி, இந்தியா. 2022-02-05. https://aim.gov.in/AIM_Brochure.pdf. பார்த்த நாள்: 2022-02-17. 
  13. "திருச்சி REC பொறியியல் கல்லூரியில் அடல் இன்குபேசன் மையம்". புதுதில்லி, இந்தியா. 2017. https://www.trecstep.com/trec-step-incubation.html. பார்த்த நாள்: 2022-02-17. 
  14. "Economictimes of india, indias first atal community centre in jaipur". புதுதில்லி, இந்தியா. 2021-10-13. https://economictimes.indiatimes.com/industry/services/education/indias-first-atal-community-innovation-center-launched-by-vivekananda-global-university-jaipur-in-association-with-atal-innovation-mission/articleshow/86990390.cms. பார்த்த நாள்: 2022-02-17. 
  15. "NDTV Education". புதுதில்லி, இந்தியா. 2021-04-12. https://www.ndtv.com/education/atal-innovation-mission-danish-embassy-ink-pact-promote-innovation-entrepreneurship. பார்த்த நாள்: 2022-02-17.