அடிப்படைக் கல்வி
சர்வதேசக் கல்வித் தர வகைப்பாட்டின் (ISCED) படி, அடிப்படைக் கல்வி என்பது (basic education) தொடக்கக் கல்வி மற்றும் கீழ்நிலைக் கல்வி என இரண்டு நிலைகளைக் கொண்டுள்ளது. [1]
உலகளாவிய அடிப்படைக் கல்வி
தொகு1997 ஆம் ஆண்டு ISCED ஆவணத்தில் அடிப்படைக் கல்வி பெரிதும் இடம்பெற்றிருந்தபோதிலும் அந்தச் சொல் சொற்களஞ்சியத்தில் சேர்க்கப்படவில்லை. [2] ஒவ்வொரு நாடும் இந்த வார்த்தையை வெவ்வேறு பொருள் கொண்டிருந்தன. 2011- ஆம் ஆண்டின் திருத்தத்திற்கு முன்னதாக, இதன் விளக்கத்தினை தெளிவுபடுத்த ஒரு விவாதக் கட்டுரை வெளியிடப்பட்டது. [3]
பெரும்பாலான நாடுகளில், ISCED 1 தேசிய அளவில் நியமிக்கப்பட்ட தொடக்கக் கல்வியினை ஒத்திருக்கிறது. மேலும், அடிப்படைக் கல்வி என்பதில் தொடக்கக் கல்வியும் இடைநிலைக் கல்வியும் அடங்கும்.ISCED 1 என்பது பள்ளிப்படிப்பின் முதல் ஆறு ஆண்டுகளாகக் கருதப்படுகிறது. [4]
வளரும் நாடுகளுக்கு உலகளாவிய அடிப்படைக் கல்வி ஒரு முன்னுரிமையாகக் கருதப்படுகிறது. யுனெஸ்கோ தலைமையிலான அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மையமாகவும் இக் கல்வி அமைந்துள்ளது. இது புத்தாயிரம் ஆண்டு வளர்ச்சி இலக்குகளில் 2வது இலக்கான 2015 ஆம் ஆண்டுக்குள் உலகளாவிய தொடக்கக் கல்வியை அடைதல் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. [5]
அடிப்படைக் கல்வியில் பாலின சமத்துவம்
தொகுகல்வியில் பாலின சமத்துவம் என்பது பாரம்பரியக் கல்வியின் வெவ்வேறு நிலைகளில் பாலின சமத்துவத்துடன் குறுகிய அளவில் சமப்படுத்தப்பட்டுள்ளது. கல்வியில் சமத்துவமின்மை மற்றும் ஏற்றத்தாழ்வுக்கு பாலினம் முதன்மைக் காரணியாக இருந்து வருகிறது, இது பரவலாக இளம் பெண்கள் மற்றும் பெண்களுக்கு பாதகமாக உள்ளது. 2000- ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் பாலின இடைவெளியைக் குறைப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, அதிக எண்ணிக்கையிலான இளம் பெண்கள் மற்றும் பெண்கள் பல்வேறு நிலைகளில் முறையான கல்வியைப் பெறுகின்றனர். மத்திய ஐரோப்பா, கிழக்கு ஐரோப்பா, மத்திய ஆசியா, கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக், லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன், வட அமெரிக்கா, மேற்கு ஐரோப்பாவில் ஆரம்பக் கல்வியில் பாலின சமத்துவ இலக்கு அடையப்பட்டுள்ளது. பெண்கள் அதிகாரமளிப்பதை உறுதி செய்ய, பாலின சமத்துவமின்மைக்கு எதிரான போராட்டத்தில் சிறுவர்களும் ஆண்களும் ஈடுபட வேண்டும். இது அடிப்படைக் கல்வி முதல் தொடங்க வேண்டும். [6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "International Standard Classification of EducationI S C E D 1997". www.unesco.org. 11 April 2013.
- ↑ "Education transforms lives | UNESCO".
- ↑ Truong, Nhung. "Review of the International Standard Classification of Education (ISCED 97) Basic Education and the review of the ISCED" (PDF). UNESCO. Archived from the original (PDF) on 26 April 2017. Retrieved 25 April 2017.
- ↑ "Educational Programmes Manual for ISCED-97 Implementation in OECD Countries" (PDF). OECD. 1999. p. 30. Retrieved 25 April 2017.
- ↑ "Goal :: Achieve Universal Primary Education". Mdg Monitor. 2011-05-15. Retrieved 2012-10-18.
- ↑ Rethinking Education: Towards a global common good? (PDF). UNESCO. 2015. p. 44. ISBN 978-92-3-100088-1.