அடிமைகளுக்கான விவிலியம்
அடிமைகளுக்கான விவிலியம் (slave bible ) கரிபியக் கடலில் பிரித்தானியப் பேரரசின் கீழ் இருந்த மேற்கிந்திய தீவுகளில், கிறித்தவ சமயத்திற்கு மாற்றப்பட்ட ஆப்பிரிக்க கருப்பின அடிமை மக்கள் ஆங்கில மொழியில் விவிலியம் கற்பதற்தாக, 1807-ஆம் ஆண்டில் அச்சடித்து வெளியிடப்பட்டது.[1] இது குறிப்பாக அடிமைகள் கல்வி கற்பதற்காக உருவாக்கப்பட்டது. அடிமை மக்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த விவிலியம் பதிப்பில் பழைய ஏற்பாட்டில் உள்ள் விடுதலைப் பயணம் எனும் நூல் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.
இந்த விவிலியத்தின் முழுத் தலைப்பு:பிரித்தானிய மேற்கு இந்தியா தீவுகளில் நீக்ரோ அடிமைகளின் பயன்பாட்டிற்காக, புனித விவிலியத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள் என்பதாகும்.[1]
நற்செய்தி பரப்பும் பிரித்தானிய கிறித்தவ சமய நிறுவனங்கள், இந்த விவிலியத்தை அடிமைப்படுத்தப்பட்ட கருப்பின மக்களின் கல்வி மற்றும் சமய மாற்றத்திற்காகப் பயன்படுத்தினர். அடிமைகள் அடிமைகளுக்கான விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் 90% மற்றும் புதிய ஏற்பாட்டில் பாதியை அகற்றினர். விலக்கப்பட்ட பத்திகளில் (விவிலியம் வாசகம்:கலாத்தியர்3: 28), "யூதரோ கிரேக்கரோ இல்லை, பிணைப்பும் சுதந்திரமும் இல்லை, ஆணும் பெண்ணும் இல்லை: ஏனென்றால் நீங்கள் அனைவரும் கிறிஸ்து இயேசுவில் ஒருவரே" என்ற வாசகம் கிளர்ச்சியைத் தூண்டக்கூடும் என்று கருதப்பட்டது. (விவிலியம் வாசகம்:எபேசியர் | 6: 5), "ஊழியர்களே, மாம்சத்தின்படி உங்கள் எஜமானர்களாக இருப்பவர்களுக்கு கீழ்ப்படியுங்கள், பயத்துடனும், நடுங்கலுடனும், உங்கள் இருதயத்தின் ஒற்றுமையிலும், கிறிஸ்துவைப் போலவே" வைக்கப்பட்டன.[2]
அடிமைகளுக்கான விவிலியத்தின் நோக்கம்
தொகுமேற்கிந்தியத் தீவுகளின் ஆப்பிரிக்க கருப்பின அடிமை மக்கள் கிறித்தவ சமயக் கல்வி பயில்வதற்கும், அடிமை மக்களிடையே விடுதலை வேட்கை ஏற்படாத வகையிலும், அடிமை முறை ஏற்கப்பட்ட ஒன்று என ஏற்கும் வகையிலும் 1807-இல் ஆங்கில மொழியில் விவிலியத்தின் பெரும் பகுதிகளை நீக்கி அச்சடித்து அடிமைகளுக்கு வழங்கப்பட்டது. எடுத்துக்காட்டாக, எகிப்தில் வலுக்கட்டாயமாக அடைக்கப்பட்டிருந்த இஸ்ரேலிய யூத மக்களை மோசே அடிமைத்தளையிலிருந்து மீட்பதை விளக்கும் விடுதலைப் பயணம் எனும் அத்தியாயம் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Little, Becky. "Why Bibles Given to Slaves Omitted Most of the Old Testament". History. A&E Television Networks, LLC. பார்க்கப்பட்ட நாள் 30 October 2019.
- ↑ Martin, Michel (December 9, 2018). "Slave Bible From The 1800s Omitted Key Passages That Could Incite Rebellion". NPR. https://www.npr.org/2018/12/09/674995075/slave-bible-from-the-1800s-omitted-key-passages-that-could-incite-rebellion. பார்த்த நாள்: December 14, 2018.
- ↑ Why Bible given to Slaves Omitted Most of the Old Testament