அடுக்கு (தரவுக் கட்டமைப்பு)

கணினியியலில், அக்க்கு என்பது ஒரு நுண்புல தரவுக் கட்டமைப்பு ஆகும். இதன் சேகரிப்பில் உள்ள தரவுகள் மீது இரண்டு செயற்பாடுகளை மட்டுமே மேற்கொள்ள முடியும். ஒன்று புதிய தரவு ஒன்றைச் அடக்கில் தள்ளுதல் (push) அல்லது சேர்த்தல். மற்றையது அடக்கில் இருக்கும் தரவை மீளுதல் அல்லது நீக்குதல் ஆகும். எது கடைசியாக சேர்க்கப்பட்டதோ அதுவே முதலில் நீக்கப்படும். இதனால் இது ஒரு கடைசி-உள்-முதலில்-வெளியே (Last-In-First-Out (LIFO)) வகைத் தரவுக் கட்டமைப்பு.