அடையாறு (ஆறு)

(அடையாறு நதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அடையார் ஆறு (Adayar River) இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள சென்னை நகரில் ஓடும் மூன்று ஆறுகளில் ஒன்று ஆகும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரிக்கு அருகில் மணிமங்கலத்தில் உருவாகும் இந்த ஆறு சென்னையில் உள்ள அடையாறு பகுதில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது. 42.5 கிலோமீட்டர் அல்லது 26.4 மைல் நீளம் கொண்ட இந்நதி சென்னையின் சுற்றுச்சூழல் கழிமுக அமைப்புக்கு பங்களிக்கிறது. அதிக மாசு அளவு இருந்தபோதிலும், படகு மற்றும் மீன்பிடித்தல் இந்த ஆற்றில் நடைபெறுகிறது. நகரத்தின் மழைநீர், சிறிய ஓடைகள் நீர், ஏரிநீர், போன்ற இடங்களிலிருந்து வரும் உபரி நீர் இந்த ஆற்றில் கலக்கிறது. சுமார் 860 சதுர கிலோமீட்டர்கள் அல்லது 331 சதுரமைல் பரப்புள்ள நகரத்திலிருந்து பெரும்பாலான கழிவுகள் இந்த நதியில் வடிகட்டப்படுகின்றன.

அடையாறு ஆறு
Adyar
அமைவு
நாடுஇந்தியா
மாநிலம்தமிழ்நாடு
நகரம்சென்னை
சிறப்புக்கூறுகள்
மூலம்ஆலந்தூர் ஏரி
 ⁃ அமைவுமணிமங்கலம், காஞ்சிபுரம், தமிழ்நாடு, இந்தியா
முகத்துவாரம்அடையாறு
 ⁃ அமைவு
வங்காள விரிகுடா, சென்னை, தமிழ்நாடு, இந்தியா
நீளம்26 mi (42 km)
வடிநில அளவு204 sq mi (530 km2)
வெளியேற்றம் 
 ⁃ அமைவுஅடையாறு, சென்னை

தோற்றமும் பயணமும்

தொகு

ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் உள்ள மணிமங்கலம் கிராமத்திற்கு அருகிலுள்ள மலாய்பட்டு தொட்டியில் (80.00 ° தீர்க்கரேகை மற்றும் 12.93 ° அட்சரேகை) இந்நதி தொடங்குகிறது. சென்னையின் த்திற்கு அருகே மேற்கு திசையில் 15 கிலோமீட்டர் தொலைவில் இந்த பகுதி உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் ஆற்றில் சேரும் இடத்திலிருந்து மட்டுமே இது ஒரு நீரோடையாகத் தோன்றத் தொடங்குகிறது. இது காஞ்சீபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டம் வழியாக சுமார் 42.5 கிலோமீட்டர்கள் (26.4 mi) ஆறாக ஓடி சென்னை ரில் உள்ள வங்காள விரிகுடாவில் கலக்கிறது.[1][2] இங்கே இது ஒரு முகத்துவாரத்தை உருவாக்குகிறது, இது அடையார் பாலத்திலிருந்து கடலின் விளிம்பில் உள்ள மணற்பிரதேசம் வரை நீண்டுள்ளது, இடையில் சில சிறிய தீவுகள் உள்ளன. இந்த முகத்துவாரம் பலவகையான பறவைகளை ஈர்க்கிறது. சுமார் 120 எக்டேர்கள் (300 ஏக்கர்கள்) கொண்ட இந்த முகத்துவாரம் 1987 ஆம் ஆண்டில் பாதுகாக்கப்பட்ட வனவிலங்கு காப்பகமாக மாற்றப்பட்டது.[3] இந்த நதி தன் வாய்க்கு அருகே ஒரு சிறிய உபநதியை உருவாக்குகிறது, இது அடையார் நதி அழைக்கப்படுகிறது, இந்த சிற்றோடை ஒரு இயற்கை கால்வாயாகும். இக்கால்வாய் அலை நீரை மீண்டும் கடலுக்குள் கொண்டு செல்கிறது.

புவியியல்

தொகு
 
அடையாறு நதி வங்காள விரிகுடாவில் இணைகிறது
 
மனப்பாக்கம் பாலத்திலிருந்து அடையாறு ஆற்றின் காட்சி
 
ஆற்றின் மீது சூரியன் மறைதல்
 
அடையாறு நதி முகத்துவாரம்

அடையாறு நதியின் ஆழம் மேற்புறப் பகுதிகளில் சுமார் 0.75 மீட்டர்கள் வரையும் கீழ்ப்புறப்பகுதிகளில் சுமார் 0.5 மீட்டர்கள் வரையும் மாறுபடுகிறது. ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதி சுமார் 530 சதுர கிலோமீட்டர்கள் (200 சதுர மைல்) ஆகும். ஆற்றுப்படுகை 10.5 மீட்டர் முதல் 200 மீட்டர் வரை அகலம் கொண்டதாக உள்ளது. சென்னை பெருநகரப் பகுதியில் அடையாறு ஆறு சுமார் 24 கிலோமீட்டர் தொலைவுக்குப் பாய்கிறது. இதில் கடலுடன் சேர்வதற்கு முன் சென்னை மாவட்டத்திற்குள் பாயும் 15 கிலோமீட்டர் தொலைவும் அடங்கும்.[4] ஆண்டுதோறும் அடையாறு ஆறு 190 முதல் 940 மில்லியன் கனசதுர மீட்டர் தண்ணீரை வங்கக் கடலுக்குள் அனுப்புகிறது. செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான வடகிழக்கு பருவமழை காலத்தில் ஆண்டு சராசரியை விட 7 முதல் 33 மடங்கு அதிகமான தண்ணீரை அடையாறு ஆறு வங்கக் கடலுக்குள் வெளியேற்றுகிறது. 40 குளங்களில் இருந்து பெறும் உபரி தண்ணீர் ஆற்றின் வழியாக ஓடுகிறது.

ஆற்றின் தற்போதைய தண்ணீர் வெளியேற்றம் நொடிக்கு 39000 கன அடியாகும். அதே நேரத்தில் எதிர்பார்க்கப்படும் வெள்ள வெளியேற்ற திறன் நொடிக்கு 60000 கன அடிகளாகும். 2005 ஆம் ஆண்டைய வெள்ளத்தின் போது அடையாறு ஆற்றில் நொடிக்கு 55000 கன அடி தண்ணீர் வெளியேற்றம் இருந்தது.[4]

கழிமுகம்

தொகு

ஐயர், பணிக்கர் ஆகிய இரு கடலியல் வல்லுநர்கள், இந்த ஆற்றின் கழிமுக ஏற்றத்தாழ்வுடைய உப்புத்தன்மையை ஆய்ந்து விளக்கியுள்ளனர். இவ்விடத்தில் காணப்படும் முக்கிய உயிரிகளாவன: பலவகைக் கடற்சாமந்திகள், வளை வாழ்வளைதசைப்புழுக்கள், வளை தோண்டும் வளைதசைப் புழுக்கள், நெப்டியுனஸ், வெருனா, நண்டுகள், கிளிபனோரியஸ், துறவி நண்டுகள், ஆஸ்ட்ரியா, மெரிட்ரிக்ஸ் மெல்லுடலிகள் மற்றும் சில மீன்கள் ஆகும். இங்கு நீரின் உப்புத் தன்மையும் மற்ற பண்புகளும் அடிக்கடி மாறிக் கொண்டேயிருக்கின்றன. ஆகையால் இங்கு வாழும் உயிரிகள் பல வகையான தகவமைப்புகளைப் பெற்றுள்ளன. கழிமுகங்களில் மிகுதியாக வண்டல் படிகின்றது. ஒளி புகுதலும் குறைந்த அளவில் தான் காணப்படுகின்றது. இத்தகைய சூழலுக்கேற்ப இங்குள்ள தாவரங்களும், விலங்குகளும் பல தகவமைப்புகளைப் பெற்றுள்ளன.[5]

சூழலியல்

தொகு

அடையாறு ஆற்றின் நதி முகத்துவாரம் உபநதி அவற்றின் தெற்குப் பகுதியில் உள்ள பிரம்மஞான சபை ஆகியவை பல ஆண்டுகளாக புலம்பெயர்ந்த மற்றும் தாயகப் பறவைகளுக்கு ஒரு புகலிடமாக உள்ளன. குறைந்த உப்புத்தன்மை, நல்ல தங்குமிடம் மற்றும் அடையர் சிற்றோடையில் அதிக மிதப்புகள் கிடைப்பது போன்ற நதி முகத்துவாரத்தின் சுற்றுச்சூழல் நிலைமைகள் மீன்களுக்கு ஒரு நல்ல நாற்றங்காலாக செயல்படுகின்றன. சிற்றோடைக்கு உள்ளேயும் வெளியேயும் அலை நீரின் ஓட்டம் படகுகளை எளிதில் பயணிக்க அனுமதித்தது. எனவே இது மீன்பிடித்தலை ஊக்குவிக்கிறது. இங்கு மீன் வர்த்தகத்தின் செழிப்பான பொருளாதாரம் இருந்தது. இருப்பினும், நகரத்தின் கழிவுநீர் மற்றும் அதன் பல்வேறு தொழில்களில் இருந்து வெளியேறும் கழிவுகள் சில காலம், ஆற்றில் கலந்து இப்பகுதியின் உயிரியல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. மாசுபாடு மற்றும் மானுடவியல் நடவடிக்கைகள் காரணமாக இந்த எண்ணிக்கை குறைந்து வருகின்ற போதிலும், அவை மேலும் நூற்றுக்கணக்கான பறவைகளை ஈர்க்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பே பிரம்மஞான சபை சுற்றுச்சூழல் கண்காணிப்பு தொடர்பான அதிரடி துவக்கமாக அறக்கட்டளையால் தொகுக்கப்பட்ட 'அடையாறு பறவைகள் பற்றிய ஒரு குறுவட்டை வெளியிட்டது. முன்மொழியப்பட்டுள்ள அடையாறு பூங்கா துடிப்பான சூழல் அமைப்பை மீட்டெடுப்பதில் முதன்மையானதாக இருக்கலாம்.

அடையாறு ஆறு சீரமைப்புப் பணிகள்

தொகு

அடையாறு ஆற்றின் முதல் 25.4 கிமீ நீளம் வரையிலான இரண்டாம் கட்ட சீரமைப்பு பணிகள் 90 கோடி ரூபாய் செலவில் 2020 ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் முடிய உள்ளது.[6]

 
சைதாப்பேட்டை பாலத்திற்குக் கீழே அடையாறு ஆறு

முக்கிய இடங்கள்

தொகு

பிரம்மஞான சபை, சென்னை படகு சங்கம், அண்ணா பல்கலைக்கழகம், தென்றல் ஆகிய முக்கிய நிறுவனங்கள் அடையாறு ஆற்றின் கரையில் அமைந்துள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  1. P. Periakali, T. Vengopal; Giridharan, L; Jayaprakash, M; Periakali, P (2009). "Environmental impact assessment and seasonal variation study of the groundwater in the vicinity of River Adyar, Chennai, India". Environmental Monitoring and Assessment 149 (1-4): 81–97. doi:10.1007/s10661-008-0185-x. பப்மெட்:18253854. 
  2. P. M. Velmurugan, T. Vengopal; Giridharan, L; Jayaprakash, M; Velmurugan, PM (2009). "A comprehensive geochemical evaluation of the water quality of River Adyar, India.". Bull Environ Contam Toxicol 82 (2): 211–217. doi:10.1007/s00128-008-9533-3. பப்மெட்:18784895. 
  3. "Adyar River". National River Conservation Directorate. Ministry of Environment and Forests. Archived from the original on 14 July 2012. பார்க்கப்பட்ட நாள் 9 March 2012.
  4. 4.0 4.1 Session-3 River and Drainage System in CMA
  5. அறிவியல் களஞ்சியம் தொகுதி 5
  6. அடையாறு ஆறு இரண்டாம் கட்ட சீரமைப்பு பணிகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அடையாறு_(ஆறு)&oldid=3968229" இலிருந்து மீள்விக்கப்பட்டது