அட்செங்குளம்

அட்செங்குளம் (Atchenkulam) என்பது தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். அகத்தீசுவரம் தாலுக்காவில் கொட்டாரம் [1]பேரூராட்சியின் ஒரு பகுதியாக இருக்கும் இக்கிராமம், கொட்டாரத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. கிராமத்தின் முகப்பில் ஒரு குளம் கிட்டத்தட்ட ஒரு பெரிய ஏரியைப் போன்ற தோற்றத்தில் உள்ளது. இக்குளத்தை அடுத்து புத்தனார் கால்வாய் என்ற சிற்றாறு ஓடுகிறது. பல்வேறு மதத்தைச் சார்ந்த 300 குடும்பங்கள் விவசாயத்தை மட்டுமே நம்பி இங்கு வாழ்ந்து வருகிறார்கள்.

அட்செங்குளம்
Atchenkulam
கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மொழிகள்
 • அலுவல்பூர்வம்தமிழ்
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)

கன்னியாகுமரியிலிருந்து நாகர்கோவில் செல்லும் வழியில் இக்கிராமம் அமைந்திருக்கிறது. .

மேற்கோள்கள் தொகு

  1. "Atchenkulam C.S.I Church". Google Maps. கூகுள். பார்க்கப்பட்ட நாள் 30 May 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அட்செங்குளம்&oldid=3855147" இலிருந்து மீள்விக்கப்பட்டது