அண்டவிய மொழிபெயர்ப்பி

அண்டவிய மொழிபெயர்ப்பி என்பது எந்த மொழியில் இருந்தும் எந்த ஒரு மொழிக்கும் நிகழ்நேரத்தில் மொழிபெயர்ப்புச் செய்யும் ஒரு கருத்திநிலைக் கருவி ஆகும். இது பல அறிபுனைக் கதைகளில் இடம்பெறும் ஒரு நுட்பக் கூறு ஆகும். அண்மைக் காலங்களில் இது குறிப்பிட்ட மொழிகளுக்கு இடையேயாவது நிறைவேற்றத்தக்க நுட்பங்கள் வளர்ச்சிபெற்று உள்ளன.