அண்ண மெய்
அண்ண மெய் எனப்படுவது, நாக்கு மேலெழுந்து அதன் உடற்பகுதியால் வல்லண்ணத்தைத் (வாய்க்கூரையின் நடுப்பகுதி) தொடுவதன் மூலம் ஒலிக்கப்படும் மெய்யொலியாகும். நாக்கின் நுனிப்பகுதி வளைந்து அண்ணத்தைத் தொடும்போது உருவாகும் ஒலி வளைநா ஒலியாகும்.[1][2][3]
பரவலாகக் காணப்படும் அண்ண மெய், மிகப் பொதுவான உயிர்ப்போலியாகிய j, ஆகும். இது உலகின் மொழிகளில் உள்ள அதிகம் காணப்படும் ஒலிகளில் முதற் பத்துக்குள் உள்ளது. மூக்கொலியான ɲ உம் பொதுவாகக் காணப்படும் ஒலியாகும். இது உலகின் 35 வீதமான மொழிகளில் காணப்படுகின்றது[4].
அனைத்துலக ஒலியெழுத்து முறையில் அடையாளம் காணப்பட்டுள்ள அண்ண மெய்கள் வருமாறு:
IPA | விளக்கம் | எடுத்துக்காட்டு | |||
---|---|---|---|---|---|
மொழி | Orthography | IPA | பொருள் | ||
அண்ண மூக்கொலி | பிரெஞ்சு | agneau | [aɲo] | ஆட்டுக்குட்டி | |
ஒலிப்பற்ற அண்ண வெடிப்பொலி | ஹங்கேரியன் | hattyú | [hɒcːuː] | அன்னம் | |
ஒலிப்புடை அண்ண வெடிப்பொலி | மார்கி | ɟaɗí | [ɟaɗí] | எருதின் திமில் | |
ஒலிப்பற்ற அண்ண உரசொலி | ஜெர்மன் | nicht | [nɪçt] | இல்லை | |
ஒலிப்புடை அண்ண உரசொலி | ஸ்பானியம் | yema | [ʝema] | முட்டை மஞ்சட் கரு | |
அண்ண உயிர்ப்போலி | ஆங்கிலம் | yes | [jɛs] | ஆம் | |
பக்க அண்ண உயிர்ப்போலி | இத்தாலியன் | gli | [ʎi] | the (ஆண்பால் பன்மை) | |
ஒலிப்புடை அண்ண உள்வாங்கொலி | சுவாஹிலி | hujambo | [huʄambo] | hello |
குறிப்புகள்
தொகு- ↑ "PHOIBLE Online -Segments". phoible.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-10-22.
- ↑ Ian Maddieson (with a chapter contributed by Sandra Ferrari Disner); Patterns of sounds; Cambridge University Press, 1984. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-26536-3
- ↑ Although in Old Tibetan the orthography did indicate a distinction between 'gy' and 'g.y' initials, the latter is commonly reconstructed as a cluster.
- ↑ Ian Maddieson (with a chapter contributed by Sandra Ferrari Disner); Patterns of sounds; Cambridge University Press, 1984. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-26536-3