அத்திப்பழம்

அத்திப்பழம்தொகு

அத்தி Moraceae தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் அறிவியல் பெயர் Ficus glomerata மற்றும் Ficus auriculate ஆகும். இது களிமண் நிலம் மற்றும் ஆற்றோரப் பகுதிகளிலும் நன்கு வளரும்.அத்தி மரத்தில் வினோதமான முறையில் பூவும் விதைகளும் சேர்ந்து பழம் போன்றதொரு தோற்றத்தைத் தருவதாக அறியப்படுகிறது.

நன்மைகள்தொகு

தலை முதல் பாதம் வரையிலான உடல் ஆரோக்கியத்துக்கு சிறந்த உணவாகும்.இதில் விட்டமின், கால்சியம், மக்னீசியம் மற்றும் இரும்புச் சத்துக்கள் நிறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

உண்ணும் முறைதொகு

அத்திப்பழத்தில் புழுக்கள் அதிகமாக இருக்கும் என்பதால் நன்கு சுத்தப்படுத்திய பிறகே உண்ண வேண்டும்.வழக்கமான உணவுக்கு 2 மணி நேரம் முன்னர் அல்லது 2 மணி நேரத்துக்குப் பின்னர் உண்ண வேண்டும்.

இயற்கை மருத்துவர்களின் கூற்றுதொகு

அத்திப்பழத்துடன் கருப்பட்டி சேர்த்து அரைத்து காய்ச்சிய பாலுடன் கலந்து கொடுப்பது குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு ஏற்றது. பழத்துடன் சீனி மற்றும் உப்பு கலந்து சாப்பிடுவதைக் கண்டிப்பாகத் தவிர்த்தல் நலம். இனிப்புச் சுவை அதிகமுள்ள பழமென்பதால் நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக் கூடாது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அத்திப்பழம்&oldid=2669667" இருந்து மீள்விக்கப்பட்டது