அநாதை மருந்து

அநாதை மருந்துகள் (Orphan drug) என்பவை அரிய நோய்களுக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகள் அல்லது உற்பத்திச் செலவு அதிகமுள்ள மருந்துகள் ஆகும். அரிய நோய்கள் உடையோர் உலகில் வெகு சிலரே இருப்பதால் அந்நோய்கட்கு மருந்து தயாரிப்போர் இல்லை. ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஐரோப்பியக் கூட்டமைப்பில் அநாதை மருந்துகளைத் தயாரிக்க அரசு நிதியுதவி வழங்கப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அநாதை_மருந்து&oldid=1368448" இருந்து மீள்விக்கப்பட்டது